சித்திரை திருவிழா.. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு..

Apr 24, 2026 | 8:55 PM

மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, வைகை அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. "திருவிழாக்களின் நகரம்" என்று அழைக்கப்படும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றது. சைவமும் வைணவமும் இணையும் இந்த மாபெரும் விழாவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மிக முக்கியமானவை. சித்திரைத் திருவிழா உலகின் மிக நீளமான விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த 15 நாள் விழாவில் முதல் 12 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அடுத்த வரும் நாட்கள் கள்ளழகருக்கான விழாவாக நடைபெறுகிறது

மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக, வைகை அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. “திருவிழாக்களின் நகரம்” என்று அழைக்கப்படும் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ்பெற்றது. சைவமும் வைணவமும் இணையும் இந்த மாபெரும் விழாவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மிக முக்கியமானவை. சித்திரைத் திருவிழா உலகின் மிக நீளமான விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த 15 நாள் விழாவில் முதல் 12 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அடுத்த வரும் நாட்கள் கள்ளழகருக்கான விழாவாக நடைபெறுகிறது

Follow Us