Viral Video : ஜாலியாக நடனமாடிய சுற்றுலாப் பயணிகள்.. பயணிகளைப் பறக்கவிட்ட விமானியின் வீடியோ!

Plane That Took Tourists Into The Air : செயிண்ட் மார்ட்டினில் உள்ள மஹோ கடற்கரையில் விமானம் புறப்படும் போது, அதன் ஜெட் காற்று சுற்றுலாப் பயணிகளைத் தூக்கி எறிந்த வைரல் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. சிலர் சிரித்துக் கொண்டே இதை அனுபவிக்க, சிலர் கீழே விழுந்தனர். இந்த அபாயகரமான ஆனால் ரசிக்கத்தக்க நிகழ்வு உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Viral Video : ஜாலியாக நடனமாடிய சுற்றுலாப் பயணிகள்.. பயணிகளைப் பறக்கவிட்ட விமானியின் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

12 May 2025 23:06 PM

உலகளாவிய போக்குவரத்தில் (Global People Transport)  விமானமானது  (plane) இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அப்படிப்பட்ட விமானமானது ஒரு இடத்தில் இருந்து மக்களை மற்றொரு இடத்திற்கு வான் வழியாக விரைவாக அழைத்துச்செல்லும் திறன் கொண்டவை. வானத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் தன்மை கொண்டவை இந்த விமானம். அந்த வகையில் செயிண்ட் மார்டனில்  (Saint Maarten) உள்ள மஹோ கடற்கரையில் (Maho Beach)  ஜாலியாக சுற்றுலாப்பயணிகள் (Tourists)  நடனமாடியபடியே இருக்கிறார்கள். அந்த இடத்தில் விமான நிலையம் ஒன்று இருக்கிறது. செயிண்ட் மார்டனில் உள்ள மஹோ கடற்கரையில் சுற்றுலா பயணிகள் இருந்த நிலையில், அவர்களை நோக்கி  விமானம் ஒன்று வந்திருக்கிறது.  விமானத்தின் பின் பகுதியில் இருந்து பலத்த காற்றை அவர்கள் மீது  வீசியிருக்கிறது. அந்த காற்று கிட்டத்தட்டப் பார்ப்பதற்கு மினி சூறாவளியைப் (Mini cyclone) போலத்தான் இருந்தது.

அந்த சுற்றுலாப் பயணிகளும் விமானத்தில் பின்னல் இருந்து வரும் காற்றை ஜாலியாக எதிர்கொண்டு வருகிறார்கள்.அதனைத் தொடர்ந்து சில வினாடிகளில் காற்று வேகமாக வரும் நிலையில் பீச்சில் உள்ள மணல் எல்லாம் பறக்கிறது. இதன் காரணமாக அவர்கள் அனைவரும் கடற்கரை மணலில் படுத்துவிடுகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த பலத்த காற்றானது பீச்சில் உள்ள நீரை எல்லாம் பறக்கவிடுகிறது.

அவ்வாறு மிகவும் பலமான காற்றை விமான செலுத்துகிறது. இதில் சுற்றுலாப் பயணி ஒருவர் காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் வேகமாகச் சென்று கீழே விழும் காட்சியை அந்த வீடியோவில் பார்க்கமுடிகிறது. இந்த வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக தெரிந்தாலும், அந்த சுற்றுலாப் பயணிகள் விருப்பப்பட்டுச் செய்வதுபோல்தான் இந்த வீடியோவில் தெரிகிறது.

இணையத்தில் கவனம் பெரும் அந்த வீடியோவை பாருங்கள் :

இந்த வீடியோவில் ,விமான நிலைய வேலி அருகே சுற்றுலாப் பயணிகள் இருக்கையில், ஒரு பெரிய MD-80 விமானம் புறப்படுவதற்காகத் தயாராகக் காத்திருக்கிறது. இந்நிலையில் சிலர் சிரித்துக் கொண்டே தங்களின் போனில் வீடியோவை எடுப்பதைப் பார்க்க முடிகிறது, மற்றவர்கள் நெருக்கமாகப் பார்க்க முன்னோக்கிச் செல்கிறார்கள். புறப்பட்ட அந்த விமானத்தில் இருந்து சக்திவாய்ந்த காற்று வீசுகிறது, இதில் கூட்டம் கூட்டமாகச் சுற்றுலாப் பயணிகள் கீழே விழுகிறார்கள்.

சிலர் அலறிக் கொண்டிருந்த அவர்களின் உடைமைகள் காற்றில் பறந்து கடலுக்குச் செல்கின்றன. கடற்கரைக்குச் செல்லும் சிலர், தூக்கி எறியப்படுவதைத் தவிர்க்க வேலிகளில் கீழே படுத்தும் கொள்கிறார்கள். இந்த வீடியோவானது இதுவரை சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். மேலும் பலரும் வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள்.