Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : யானைகளின் தூய்மையான பாசம்.. மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் வீடியோ!

Elephants Protecting Keeper : தாய்லாந்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில், கொட்டும் மழையில் தனது காப்பாளரை இரண்டு யானைகள் பாதுகாப்பதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. யானைகள் காப்பாளருக்கு அருகில் நின்று மழையிலிருந்து காத்து, தும்பிக்கையால் கொஞ்சியுள்ளன. இந்த வீடியோ, விலங்குகளின் அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தி, இணையவாசிகளிடையே பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இரண்டு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

Viral Video : யானைகளின் தூய்மையான பாசம்.. மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் வீடியோ!
வைரல் வீடியோ
barath-murugan
Barath Murugan | Published: 11 May 2025 22:06 PM

உலகத்தில் மிகப்பெரிய உயிரினங்களில் ஒன்றாக இருப்பது யானை (Elephant). யானைகள் பொதுவாகவே கூட்டம் கூட்டமாக வாழக்கூடியது என்பது நமக்குத் தெரிந்ததே, அந்த யானைகளைப் பலரும் வளர்த்து வருகிறார்கள். இந்தியாவை (India) பொறுத்தவரையில் யானைகள் மிருகக்காட்சி (Zoo) சாலைகளில் மற்றும் கோயில்களில் இருக்கிறதை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். அந்த யானைகள் பராமரிப்பவர்களை மிகவும் பாசமாகக் கொஞ்சும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகுவது உண்டு. அந்த வகையில் இரு யானைகள்  (Two elephants) அதன் பாதுகாப்பாளரைக் கொட்டும் மழையிலிருந்து பாதுகாக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த யானைகள் தாய்லாந்தில் (Thailand) உள்ள மிருகக்காட்சி சாலையில் அதன் பராமரிப்பாளரை மழையில் இருந்து பாதுகாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த இரு யானைகளும், பாதுகாப்பாளரைக் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் பலரின் மனதையும் கவர்ந்து வருகிறது. யானைகள் எவ்வளவு பெரிய மிருகமாக இருந்தாலும், அவைகளின் மனது குழந்தையைப் போலத்தான் இருக்கும். நாமும் பல கோயில்களில் யானைப் பாகனைக் கொஞ்சி விளையாடுவதை நேரிலே பார்த்திருக்கிறோம். அதைப் போல இந்த இரு யானைகளும் தனது பாதுகாப்பாளரைக் கொஞ்சி விளையாடுகின்றனர். இணையத்தில் மக்களைக் கவரும் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

இணையத்தில் மக்களைக் கவரும் அந்த வீடியோ :

 

View this post on Instagram

 

A post shared by Lek Chailert (@lek_chailert)

இந்த வீடியோவில், இரு யானைகள் இருக்கிறது. அங்கு நல்ல மழை பெய்யும் நிலையில், அதன் பாதுகாப்பாளர் மழையில் நனைந்தபடியே இருக்கிறார். இந்நிலையில் இதைக் கவனித்த இரு யானைகளும் அவரின் அருகில் வந்து யில் மழையில் நனைந்தபடியே பாதுகாத்து நிற்கின்றன. இதே நேரத்தில் அந்த இரு யானைகளும் அதன் பாதுகாவலரை, தும்பிக்கையால் முத்தம் கொடுக்கின்றன. இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் இந்த வீடியோ இதுவரை சுமார் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாம், மேலும் சுமார் 1 லட்சத்திற்கும் மேல் லைக் பெற்றுள்ளது. விலங்குகளின் அன்பு மற்றும் பாசம் குறித்தான இந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல பயனர்கள் வீடியோவின் கீழ் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள், அதில் சில முக்கியமான கருத்துக்களைப் பற்றிப் பார்க்கலாம்.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் பல பயனர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள், அதில் முதல் பயனர் ஒருவர், யானையின் உருவம் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அதைவிடமும் அவைகளின் அன்பு மிகவும் பெரியதாக இருகிறது என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் இந்த யானையை பார்ப்பதற்கு ஒரு குழந்தையை போல் இருக்கிறது, அதன் அன்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை என்று கூறியிருக்கிறார்.