தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன் – உதவிய டியூசன் மாஸ்ட்ர் – அதிர்ச்சி சம்பவம்
Student steals to buy iPhone: ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன், தன் தந்தையின் கடையிலிருந்து தவணை முறையில் பணத்தைத் திருடி, தன் டியூஷன் ஆசிரியரிடம் கொடுத்து மறைத்து வைத்திருக்கிறான். பின்பு அந்த பணத்தில் ஐபோன் வாங்கியிருக்கிறான. பின்னர் தனது வீட்டில் மறைத்து வைத்து ஐபோனை பயன்படுத்தியிருக்கிறான். இதனை பார்த்த தந்தை சிறுவனிடம் ஐபோன் குறித்து கேள்வி எழுப்பிய போது உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து, அவர்களை சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் நல்ல மனிதராக உருவாக்க வேண்டும் என இரவும் பகலும் கனவு காண்கிறார்கள். அதன்படி, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள், மேலும் அவர்களுக்கு உண்ண ஆரோக்கியமான உணவு, உடுத்த உடை என பார்த்து பார்த்து செய்கிறார்கள். இருப்பினும், சில குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கஷ்டங்களை புரிந்துகொள்வதில்லை. சில குழந்தைகள் தங்களது பெற்றோர்களை ஏடிஎம் (ATM) மிஷினாகவே பார்க்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் ஹைதராபாத்தில் (Hyderabad) நடந்திருக்கிறது. ஹைதராபாத்தின் ஜீடிமெட்லா என்ற பகுதியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர், தனது தந்தையின் கடையிலிருந்து தவணை முறையில் பணத்தைத் திருடி, தனது டியூஷன் ஆசிரியரிடம் கொடுத்து மறைத்து வைத்திருக்கிறான். பின்னர் அந்தப் பணத்தில் அவர் ஒரு ஐபோன் (IPhone) வாங்கியிருக்கிறார்.
சிறுவன் அந்த ஐபோனை வீட்டில் யாரும் பார்க்காமல் மறைத்து வைத்து பயன்படுத்தி வந்திருக்கிறான். இந்த நிலையில் இதனை அவரது தந்தை கவனித்திருக்கிறார். சிறுவனை பிடித்து விசாரித்த போது அவருக்கு உண்மை தெரியவந்திருக்கிறது. தெலங்கானாவின் ஜீடிமெட்லாவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்
ஜீடிமெட்லாவின் ஷாப்பூர்நகரில் உள்ள எச்எம்டி பகுதியில் வசிக்கும் கமல் ஜெயின், உள்ளூர் சர்க்கரை வியாபாரி. அவருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறார். கமல் ஜெயின், தனது மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே அவரது வீட்டிற்கு எதிரே வசிக்கும் சந்தீப் கெலோ என்ற நபரிடம் சிறுவனை டியூஷனுக்கு அனுப்பியிருக்கிறார். டியூசன் சென்ற சில மாதங்களில் இருவரும் நண்பர்களானார்கள். தந்தையின் தொழிலை நன்கு புரிந்து கொண்ட மகன் டியூஷன் மாஸ்டரின் மகனின் உதவியுடன் ஒரு வருடம் கடையில் இருந்து பணத்தைத் திருடத் தொடங்கியிருக்கிறார்.
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்த சிறுவன் ஒரு குறிப்பிட்ட தொகையை திருடியிருக்கிறார். அவரது தந்தையின் கடையிலிருந்து மொத்தமாக ரூ. 2 லட்ச ரூபாயை எடுத்து டியூஷன் மாஸ்டரிடம் கொடுத்திருக்கிறார். பின்னர் அந்தப் பணத்தில் தனக்கு ஒரு ஐபோன் வாங்கியிருக்கிறார். வீட்டில் யாரும் பார்க்காதபடி அவர் அந்த ஐபோனோ பயன்படுத்தினார். இருப்பினும், சில நாட்களில் அவரது தந்தை சிறுவன் ஐபோன் பயன்படுத்துவதை கண்டறிந்திருக்கிறார். அவரது தந்தை இந்த போன் எப்படி வந்தது என்று கேட்டபோது டியூஷன் ஆசிரியர் அதை தனக்குக் கொடுத்ததாகக் கூறினார்.
டியூசன் மாஸ்டர் கைது
இதனையடுத்து இதுகுறித்து கடுமையாக விசாரித்த போது சிறுவன் தனது தந்தையிடம் உண்மையை சொல்லியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த கமல் ஜெயின் தனது மகனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் நபர் மீது ஜீடிமெட்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல் துறையினர் டியூஷன் மாஸ்டர் சந்தீப் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வருடமாக தனது மகன் கடையில் பணம் எடுப்பதை தந்தை கவனிக்கவில்லை என்பதும், தனது மகன் விலையுயர்ந்த ஐபோனைப் பயன்படுத்துவதை குடும்ப உறுப்பினர்கள் கவனிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும் காவல்துறையினர் அறிவுரை கூறினர்.