வாட்ஸ்அப்பில் புதிய நம்பரை மாத்தப்போறீங்களா? மெசேஜ்கள், வீடியோக்களை இழக்காமல் மாற்றுவது எப்படி?

Keep WhatsApp data safe : வாட்ஸ்அப்பில் நம்முடைய எண்ணை மாற்றும் போது, பழைய மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், முக்கியமான தகவல்கள் எல்லாம் போய்விடும் என்ற கவலை பலருக்கும் இருக்கும். ஆனால் அதற்கான சிறந்த தீர்வை வாட்ஸ்அப் வழங்குகிறது. அதனை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் புதிய நம்பரை மாத்தப்போறீங்களா?  மெசேஜ்கள், வீடியோக்களை இழக்காமல் மாற்றுவது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

30 Apr 2025 17:28 PM

வாட்ஸ்அப் (WhatsApp) என்பது உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் தினசரி பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மெசேஜிங் செயலியாகும். இது டெக்ஸ்ட் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள், ஆவணங்கள் மற்றும் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள் (Video Call) போன்ற வசதிகளை வழங்குகிறது. எந்தவொரு தருணத்திலும், எந்த இடத்தில் இருந்தாலும் நம்முடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுடன் உடனடியாக தகவல் பகிரவும், தொடர்பில் இருக்கவும் இந்த செயலி உதவுகிறது. இத்தகைய பயன்பாடுகளால், வாட்ஸ்அப் இன்று மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு புதிய எண்ணிற்கு மாறும் பொழுது, உங்களது மெசேஜ் ஹிஸ்ட்ரி, கணக்கு விவரங்களையும் இலகுவாக மாற்றிக் கொள்ள உதவும் ஒரு இன்பில்ட் (inbuilt) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் உங்கள் காண்டாக்ட்டில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் புதிய எண்ணைப் பற்றி தெரிவிக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • பழைய எண்ணில் இருந்து புதிய எண்ணிற்கு மாறும்போது குரூப் சாட் ஹிஸ்ட்ரி, பகிரப்பட்ட ஃபைல்ஸ்கள் போன்ற அனைத்தையும் அப்படியே மாற்றிக்கொள்ள முடியும். மேலும் பழைய எண்ணில் பகிரப்பட்ட மீம்ஸ்கள், வாய்ஸ் மெசேஜ்கள் அனைத்தையும் இழக்காமல் பாதுகாக்கிறது.
  • புதிய எண்ணை மாற்றியவுடன் நேரடியாக நமது காண்டாக்டில் உள்ள தொடர்புகளுக்கு பழைய படி மெசேஜ் செய்யலாம். இதனால் அவர்களுக்கு நீங்கள் மொபைல் எண்ணை மாற்றியது தொடர்பாக பகிரத் தேவையில்லை. இதனால் உங்கள் அழைப்புகள் எளிதாகிறது.
  • புதிய மொபைல்போன் அல்லது புதிய சிம் பயன்படுத்துகிறீர்கள் என்றாலும் பழைய தொலைபேசியில் உள்ள லோக்கல் பேக்கப் மூலம் உரையாடல் போன்றவற்றை மீட்டெடுக்க முடியும்.

மொபைல் எண்ணை மாற்றுவதற்கான வழிமுறை

  • உங்கள் பழைய தொலைபேசியில் WhatsApp செயலியைத் திறந்த பிறகு, “Settings” (அமைப்புகள்) பகுதியில் செல்லவும்.
  • ஆண்ட்ராய்டு பயனர்கள் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் சென்று கடைசியில் உள்ள செட்டிங்ஸ் என்பதை கிளிக் செய்யவும். அதில் Accounts என்பதை தேர்ந்தெடுக்கவும், அதில் Change Number என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். ஐபோன் பயனர்கள் கீழ் வலது மூலையில் உள்ள செட்டிங்ஸ் என்பதை தேர்ந்தெடுத்து அதில் Accounts என்பதை கிளிக் செய்து அதில் Change Number என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு பழைய நம்பர்  மற்றும் புதிய நம்பர் என்ற இரண்டு பதிவுகள் இருக்கும். பழைய நம்பர் என்ற இடத்தில் உங்கள் பழைய நம்பர் இருக்கும். புதிய நம்பரில் நீங்கள் மாற்றப்போகும் நம்பரை எண்டர் செய்து ஓகே கொடுக்கவும்.
  • பின்னர் தகவல்களை உறுதி செய்து நெக்ஸ்ட் என்பதை அழுத்தவும். பின்னர் புதிய அறிவிக்க வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது All Contacts என்று கொடுப்பதன் மூலமாகவோ அல்லது நீங்கள் சாட் செய்த நபர்களுக்கு மட்டும் என்பதை குறிக்க Contacts I have chats with என்பதை தேர்ந்தெடுக்கவோ செய்யலாம்.
  • பின்னர் விவரங்களை சரிபார்த்து Done என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்போன் மற்றும் SIM கார்டு இரண்டையும் மாற்றினால்?

  • பழைய தொலைபேசியில், WhatsApp  –  Settings  – Chats –  Chat Backup என்பதைத் தேர்வு செய்து உங்கள் உரையாடல் வரலாற்றின் லோகல் பேக்அப்பை உருவாக்கிக்கொள்ளவும்.
  • வீடியோக்களைச் சேர்க்கவேண்டுமென்ற விருப்பத்தை தெரிவு செய்யலாம். அதனால் பேக்அப் அளவு அதிகரிக்கும்
  • புதிய தொலைபேசியில் வாட்ஸ்அப் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, புதிய எண்ணை சரிபார்க்கவும். பின்னர் Restore என்ற விருப்பத்தை கிளிக் செய்து, பழைய பேக்அப்பிலிருந்து உங்கள் சாட் ஹிஸ்ட்ரியைப் பெறலாம்.