Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மது போதையில் இப்படியா? 2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த இளைஞர்.. பறிபோன உயிர்!

Chennai Crime News : சென்னை சூளைமேட்டில் இரண்டாவது மாடியில் இருந்து இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் இருந்த இளைஞர், இரண்டாவது மாடியில் இருந்து உருண்டு விழுந்துள்ளார். இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று போலீசார் கூறினர்.

மது போதையில் இப்படியா? 2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த இளைஞர்.. பறிபோன உயிர்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 May 2025 08:24 AM

சென்னை, மே 06 : சென்னை சூளைமேட்டில் மதுபோதையில் இருந்த இளைஞர், இரண்டாவது மாடியில் இருந்து உருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உறவினர் வீட்டிற்கு வந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கோழிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பினேஷ் (34). இவர் கேரளாவில் எலக்ட்டீரிசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் 2025 மே 4ஆம் தேதி தனது சித்தப்பா மகள் பிரதீப் ப வளைக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரளாவில் இருந்து ரயில் மூலம் சென்னை சூளைமேட்டிற்கு வந்திருக்கிறார்.

2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்து இளைஞர் பலி

வளைகாப்பு நிகழ்ச்சிக்காக சூளைமேட்டில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி இருக்கிறார். சித்தப்பா வீட்டில் இருக்கும்போது பினேஷ், மது குடித்தே வந்திருக்கிறார். அதன்படி, 2025 மே 4ஆம் தேதி இரவு மது போதையில் இருந்த பினேஷ், 2வது மாடியில் தூங்க சென்றிருக்கிறார். அப்போது, போதையில் இருந்நத பினேஷ், இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதில், பினேஷூக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இவரது அலறல் சத்தத்தை கேட்டு, அவரது உறவினர் பினேஷை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, சூளைமேடு போலீசார் பினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கேரளாவில் இருந்து வந்த இளைஞர், மதுபோதையில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் அதிர்ச்சி

சமீபத்தில் கூட, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆறாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். ஆறாவது மாடியில் உள்ள தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுவன், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, கால் இடறி விழுந்துள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது அவரது குடும்பத்தினரியே சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், மன உளைச்சலில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவர், நான்காவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவர் கிஷோர் அடையாளம் காணப்பட்டது.  இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் குளத்தில் மூழ்கிய 3 பேர்.. துடிதுடித்து பலி!
கோயில் குளத்தில் மூழ்கிய 3 பேர்.. துடிதுடித்து பலி!...
யாரைப் பார்த்தும் பயப்படாதே.. பும்ராவுக்கு சச்சின் அட்வைஸ்
யாரைப் பார்த்தும் பயப்படாதே.. பும்ராவுக்கு சச்சின் அட்வைஸ்...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கப்போகும் அடுத்தப் படம் இதுதான்...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கப்போகும் அடுத்தப் படம் இதுதான்......
நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை.. என்னெல்லாம் நடக்கும்?
நாடு முழுவதும் நாளை போர் ஒத்திகை.. என்னெல்லாம் நடக்கும்?...
இபிஎஃப்ஓவில் வழங்கப்படும் 5 விதமான ஓய்வூதியங்கள் - முழு விவரம்!
இபிஎஃப்ஓவில் வழங்கப்படும் 5 விதமான ஓய்வூதியங்கள் - முழு விவரம்!...
கண்கொள்ளாக் காட்சி: தென்காசிக்கு அருகே இப்படி ஒரு இடமா?
கண்கொள்ளாக் காட்சி: தென்காசிக்கு அருகே இப்படி ஒரு இடமா?...
திருச்செந்தூர் செல்ல உகந்த நாள் எது?.. என்ன காரணம் தெரியுமா?
திருச்செந்தூர் செல்ல உகந்த நாள் எது?.. என்ன காரணம் தெரியுமா?...
மே 8ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள்..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மே 8ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள்..வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு...
பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை.. தலையை துண்டித்த கொடூரம்!
பாஜக பெண் பிரமுகர் வெட்டிக் கொலை.. தலையை துண்டித்த கொடூரம்!...
வான்கடே பிட்சில் MI ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா GT..?
வான்கடே பிட்சில் MI ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா GT..?...
‘தேர்வில் தோல்வியடைவாய்’ என்றார்கள்… ஆனால் வெற்றியை வென்றேன்!
‘தேர்வில் தோல்வியடைவாய்’ என்றார்கள்… ஆனால் வெற்றியை வென்றேன்!...