கார்த்திக் சுப்பராஜ் இயக்கப்போகும் அடுத்தப் படம் இதுதான்… அவரே கொடுத்த அப்டேட்
Director Karthik Subbaraj Next Movie: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் தமிழி சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் படத்தின் மூலம் தான் விஜய் சேதுபதி நன்கு அறியப்பட்டார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் வித்யாசமான கதைகளத்தில் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஜிகர்தண்டா படத்தை இயக்கினார் கார்த்திக் சுப்பராஜ். இதில் நடிகர் சித்தார்த் நாயகனாக நடித்திருந்தார்.
தொடர்ந்து வித்யாசமான கதை களத்தை மையமாக வைத்து படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தொடர்ந்து இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மேலும் தற்போது வெளியாகியுள்ள ரெட்ரோ வரை அவரது இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் இறுதியாக நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்தை இயக்கி இருந்தார் கார்த்திக் சுப்பராஜ். படம் சூர்யா ரசிகர்களுக்கு மாஸாகவும் மற்றவர்களுக்கு கலவையான விமர்சனத்தையுமே தந்தது. சமீபத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இனி இணையதளங்களில் வரும் விமர்சனத்தை படிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
காரணம் ரெட்ரோ படத்திற்கு சிலர் நெகட்டிவ் விமர்சனம் அளித்திருதனர் என்று தெரிவித்திருந்தார். இதற்கு படங்களைப் பார்த்தவர்கள் பலரும் படம் நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்றுதானே சொல்வோம் என்றும் தெரிவித்தனர். இப்படி ரெட்ரோ ஃபீவரே குறையாத நிலையில் அடுத்து அவர் இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் கார்த்திக் சுப்பராஜ் பேசிய வீடியோ:
“My Next film after #Retro might be a independent film✌️. I will make a film, just send it to festivals, might be after an year will release in theatres🎥. I have a script ready long back. It’s a small budget film with new artist🤝🌟”
– Karthiksubbarajpic.twitter.com/63973PQdwJ— AmuthaBharathi (@CinemaWithAB) May 6, 2025
அதன்படி அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது அடுத்தப் படம் ஒரு இண்டிபெண்டண்ட் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அந்த படத்தை திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப உள்ளதாகவும் அதனை தொடர்ந்து ஒரு வருடத்திற்கு பிறகு அந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.