கமல் சார் தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல இந்தியாவின் பெருமை – நடிகை தேவயானி
Actress Devayani About Kamal Haasan: நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை தேவயானி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆக உள்ளார். இயக்குநர் சிவா ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள நிழற்குடை படத்தில் நடிகை தேவயானி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது குறிப்பிடதக்கது.

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் இருந்தாலும் ஹோம்லி நடிகைகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி குடும்ப குத்துவிளக்காக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் நடிகை தேவயானி (Actress Devayani). நடிகையாக அறிமுகம் ஆன சில படங்களில் மாடர்ன் உடைகளில் நடிகை தேவையானி நடித்திருந்தாலும் அதனை தொடர்ந்து பல படங்களில் அவர் பாவாடை தாவணி புடவையிலேயே தோன்றினார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் ஒரு சில கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் 1995-ம் ஆண்டு தொட்டா சினுங்கி என்ற படத்தில் அறிமுகம் ஆகி இருந்தாலும் இவர் 1996-ம் ஆண்டு நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடித்த காதல் கோட்டை படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
பார்க்காமலே காதல், லாங் டிஸ்டன்ஸ் காதல் என்று இந்தப் படம் தற்போது வரை ரசிகர்களுக்கு பிடித்தமான படங்களில் லிஸ்டில் உள்ளது. குறிப்பாக இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடிகர்கள் அஜித் மற்றும் தேவயானி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது திரையரங்கே அதிர்ந்தது என்பார்கள் அப்போது படம் பார்த்தவர்கள்.
இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சூர்யவம்சம், மறுமலர்ச்சி, நினைத்தேன் வந்தாய், மூவேந்தார், தொடரும், கும்மி பாட்டு, நீ வருவாய் என, நிலவே முகம் காட்டு, பாட்டாளி, வல்லரசு, தெனாலி, ஃப்ரண்ட்ஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகி, பஞ்சதந்திரம், தென்காசிப் பட்டனம் என பல படங்களில் நடித்துள்ளார்.
கமல் ஹாசன் குறித்து தேவயானி பேசியது என்ன?
நான் #கமல் சாரோட மிகப்பெரிய ரசிகை, அவருக்கு சினிமாவில் தெரியாதது ஒன்னுமே இல்ல எல்லாமே தெரியும், மிகச்சிறந்த அறிவாளி முக்கியமா சினிமாவிற்கு வரும் அடுத்த தலைமுறைக்கு அவர் தான் இன்ஸ்பிரேஷன், தமிழ்நாட்டின் பெருமை மட்டுமல்ல இந்தியாவின் பெருமை கமல் சார் – நடிகை #தேவயானி👏#KamalHaasan pic.twitter.com/70bPKbPsE2
— SundaR KamaL (@Kamaladdict7) May 5, 2025
இதில் இவர் கமல் ஹாசன் உடன் இணைந்து தெனாலி, பஞ்சதந்திரம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை தேவயானி கமல் ஹாசன் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் கமல் ஹாசனின் மிகப்பெரிய ரசிகை நான்.
சினிமாவில் புதிதாக வரும் பலருக்கு அவர் இன்ஸ்பரேஷனாக இருக்கிறார். அவர் தமிழ் நாட்டிற்கு மட்டும் இன்றி இந்தியாவிற்கே பெருமை என்று நடிகை தேவயானி தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் நடித்த அனுபவம் மிகவும் பொக்கிஷமான ஒன்று என்றும் அவர் தெரிவித்திருந்தார்.