இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் உன்னி முகுந்தன்… அதுவும் எப்படிபட்ட கதை தெரியுமா?
Actor Unni Mukunthan: கடந்த 2024-ம் ஆண்டு உன்னி முகுந்தன் தமிழில் கருடன் படத்தில் நடித்திருந்தார். நடிகர் சூரி நாயகனாக நடித்திருந்த இந்தப் படத்தில் சசிக்குமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதில் உன்னி முகுந்த் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மலையாளம், தெலுங்கு, தமிழ் என முன்னணி நடிகராக வலம் வரும் உன்னி முகுந்தன் (Actor Unni Mukundan) தற்போது இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். அதுகுறித்த அறிவிப்பை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவுடன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் உன்னி முகுந்தன் அறிமுகம் ஆனது என்னமோ தமிழ் சினிமாவில் தான். கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் வெளியான படம் சீடன். இந்தப் படத்தின் மூலம் தான் நடிகர் உன்னி முகுந்தன் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இதில் நடிகை அனன்யா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் (Actor Dhanush) சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து 2011-ம் ஆண்டு பாம்பே மார்ச் 12 படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்திருந்திருந்தார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்த உன்னி முகுந்த் தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்தி உள்ளார்.
இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஏழாம் சூர்யன், இது பத்திரமானல், ஒரிசா, தி லாஸ்ட் சப்பர், விக்ரமாதித்யன், கேஎல் 10 பாத்து, ஸ்டைல், ஒரு முறை வந்து பார்த்தயா, கிளின்ட், இரா, மாமாங்கம், மேப்படையன், மாளிகைப்புரம், காதிகன், மார்கோ, கெட் செட் பேபி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இறுதியாக இவரது நடிப்பில் வெளியான மார்கோ மற்றும் கெட் செட் பேபி படம் இரண்டிற்கும் நல்ல வித்யாசம் உள்ளது. மார்கோ அதிரடி ஆக்ஷனாகவும் கெட் செட் பேபி ஜாலியான படமாகவும் இரண்டு வெவ்வேறு தளத்தில் வெளியாகி இருந்தது. மேலும்தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து வரும் நடிகர் உன்னி முகுந்தன் தற்போது இயக்குநராக உள்ளதை அறிவித்துள்ளார்.
உன்னி முகுந்தன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், எனக்குள் இருக்கும் குழந்தை புராணக் கதைகளை நம்பி வளர்ந்தது. தைரியம், தியாகம் மற்றும் மந்திரக் கதைகளால் ஈர்க்கப்பட்டது. புத்தகங்கள், திரைப்படங்கள், நாட்டுப்புறக் கதைகள், சிறிய அதிரடி கதாபாத்திரங்கள் ஆகியவற்றில் மட்டுமல்ல என் கனவுகளிலும் என் ஹீரோக்களைக் கண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதனால் அப்படி ஒரு கதையை தான் இயக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. தான் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தை முடிவித்துவிட்டு இயக்குநராக மாற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.