Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மரணமாஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? – வெளியானது மாஸ் அப்டேட்

Maranamass Movie OTT Update: இயக்குநர் சிவபிரசாத் இயக்கத்தில் நடிகரும் இயக்குநருமான பேசி ஜோசஃப் நாயகனாக நடித்தப் படம் மரணமாஸ். மிகவும் வித்யாசமான தோற்றத்தில் இருக்கும் பேசில் ஜோசஃபின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

மரணமாஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? – வெளியானது மாஸ் அப்டேட்
மரணமாஸ்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 May 2025 06:57 AM

மலையாள சினிமாவில் இயக்குநர், நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவராக இருப்பவர் பேசில் ஜோசஃப் (Basil Joseph). இவர் 2013-ம் ஆண்டு இயக்குநரும் நடிகருமான வினீத் ஸ்ரீனிவாசனிடம் (Vineeth Sreenivasan) உதவி இயக்குநராக பணியாற்றிய பிறகு 2015-ம் ஆண்டு இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்கிய முதல் படம் குஞ்சிராமாயணம். 2015-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. அதனை தொடர்ந்து 2017-ம் ஆண்டு கோதா, 2021-ம் ஆண்டு மின்னல் முரளி. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து வெளியான மின்னல் முரளி இந்திய சினிமாவையே திரும்பிக் பார்க்க வைத்தது என்று சொல்லலாம். இந்தப் படத்திற்காக பேசில் ஜோசஃபிற்கு பல நாடுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் கதையும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.

மழை நாளில் வெளியே சென்ற இருவருக்கு மின்னல் தாக்கி மயங்கி விழுகிறார்கள். மயக்கம் தெளிந்ததும் அவர்களது உடலில் அமானுஷ்ய சக்தி இருப்பதை உணர்கிறார்கள். அதில் ஒருவர் அந்த சக்தியை நல்ல விசயங்களுக்காகவும் மற்றொருவர் அந்த சக்தியை தீய விசயங்களுக்காகவும் பயன்படுத்துவதே படத்தின் கதை.

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக பான் இந்திய அளவில் தன்னை நிரூபித்த பேசில் ஜோசஃப் நடிகராக தன்னை பிரபலமாக்கியது 2022-ம் ஆண்டு இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் மூலம் தான். இந்தப் படம் மலையாளம் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்தப்படத்தில் நடித்தவர் தான் மின்னல் முரளி இயக்குநரா என்றும் ஆச்சரியத்துடன் ரசிகர்கள் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது படங்களை இயக்குவதில் இருந்து விலகி உள்ள பேசில் ஜோஜஃப் தொடர்ந்து நடிகராக நடித்து வருகிறார். இறுதியாக இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் மரணமாஸ். இந்தப் படத்தை இயக்குநர் சிவபிரசாத் இயக்கியுள்ளார். இது இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். மேலும் இந்தப் படத்தை நடிகர் டொவினோ தாமஸ் தயாரித்துள்ளார்.

மரணமாஸ் படத்தின் ஓடிடி அப்டேட்டை வெளியிட்ட பேசில் ஜோஜஃப்:

 

View this post on Instagram

 

A post shared by Sony LIV (@sonylivindia)

இந்தப் படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. டாக் காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவலைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற மே மாதம் 15-ம் தேதி 2025-ம் ஆண்டு சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் உன்னி முகுந்தன்...
இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் உன்னி முகுந்தன்......
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. கிராமுக்கு இவ்வளவா?
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. கிராமுக்கு இவ்வளவா?...
ஊட்டிக்கு போறீங்களா? தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஊட்டிக்கு போறீங்களா? தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை...
தமிழ்நாடு 3 நாள் சுற்றுலாத்திட்டம்: இப்போதே முன்பதிவு செய்யுங்கள்
தமிழ்நாடு 3 நாள் சுற்றுலாத்திட்டம்: இப்போதே முன்பதிவு செய்யுங்கள்...
உற்பத்தித்துறை ஸ்டார்ட்அப்களுக்கு அழைப்பு! யார் விண்ணப்பிக்கலாம்?
உற்பத்தித்துறை ஸ்டார்ட்அப்களுக்கு அழைப்பு! யார் விண்ணப்பிக்கலாம்?...
2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்து இளைஞர் பலி!
2வது மாடியில் இருந்து உருண்டு விழுந்து இளைஞர் பலி!...
முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வு சொல்லும் பதஞ்சலி
முடி உதிர்வு பிரச்னைக்கு தீர்வு சொல்லும் பதஞ்சலி...
டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான படங்கள் நிறைய வரவேண்டும்...
டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான படங்கள் நிறைய வரவேண்டும்......
வைகோவுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் அனுமதி!
வைகோவுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் அனுமதி!...
கோவில் தேரோட்டத்தில் மோதல் – பலர் படுகாயம், வீடுகளுக்கு தீவைப்பு
கோவில் தேரோட்டத்தில் மோதல் – பலர் படுகாயம், வீடுகளுக்கு தீவைப்பு...
"உங்களுக்கு முழு ஆதரவு” பிரதமர் மோடியிடம் உறுதியளித்த ரஷ்யா!