Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

BLDC ஃபேனை மக்கள் அதிக விரும்பக் காரணம்? அதில் என்ன ஸ்பெஷல்?

Switch to BLDC fans : வீட்டில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஃபேன்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் நிலையில் இதற்கு மாற்றாக BLDC ஃபேன்களை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த மின்சாரத்தில் இயங்கும் இவை, நீண்ட ஆயுள், அமைதியான செயல்பாடு, இன்வெர்டருக்கு ஏற்றது உள்ளிட்ட காரணங்கள் மக்கள் இந்த ஃபேனை அதிகம் விரும்புகின்றனர். இந்த ஃபேன் குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

BLDC ஃபேனை மக்கள் அதிக விரும்பக் காரணம்? அதில் என்ன ஸ்பெஷல்?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 06 May 2025 15:58 PM

அக்னி நட்சத்திரம் (Agni Nakshatram) துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஏசி, (AC) ஏர் கூலர்,  ஃபேன் போன்ற பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வீடுகளில் ஃபேன்கள் நாள் முழுவதும் இயங்கி வருகிறது. இதனால் வழக்கத்தை விட மின் கட்டணம் அதிகரித்திருக்கிறது. மேலும் அதிக பயன்பாடு காரணமாக விரைவில் பழுதாகி விடுகின்றன. இத்தனை ஆண்டுகளாக வழக்கமான ஃபேன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அதிக எண்ணிக்கையில் மக்கள் BLDC ஃபேன்களை தேடி வருகின்றனர்.  குறைந்த மின் பயன்பாடு, அதிக செயல்திறனிலும், நீண்ட ஆயுள் ஆகிய காரணங்களுக்காக மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ஃபேன்களாக மாறியிருக்கிறது.

BLDC ஃபேன் என்றால் என்ன?

BLDC என்றால் Brushless Direct Current Fan. இதன் முக்கிய அம்சம், வழக்கமான ஃபேன்களில் உள்ள பிரஷ் மோட்டார்கள் இல்லாமல், நேரடியாக DC மோட்டார் மூலம் இயங்குகிறது. இதனால் மின்சாரம் மிகவும் குறைவாகவே செலவாகிறது. வழக்கமான ஏசி மற்றும்  ஃபேன்கள் 50 முதல் 100 வாட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் நிலையில், BLDC ஃபான்கள் வெறும் 24 முதல் 35 வாட் மட்டுமே பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.

முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

  • ஒரு யூனிட் மின்சாரத்தில், வழக்கமான ஃபேன் 6.5 முதல் 10 மணி நேரம் மட்டுமே இயங்கும். ஆனால் BLDC ஃபேன் 25 முதல் 28 மணி நேரம் இயங்கும். இதனால் மூன்று மடங்கு மின்சாரம் மிச்சமாகும்.
  • இந்த ஃபேன்கள் மிகவும் அமைதியானது. இந்த ஃபேனில் சுமார் 32 டெசிபெல் மட்டுமே சத்தம் வரும் என்று கூறப்படுகிறது.  வழக்கமான ஃபேன்களில் அதன் மோட்டாரில் உள்ள பிரஷ் காரணமாக சத்தம் அதிகம் இருக்கும்.
  • மின்தடை ஏற்படும் நேரத்தில் BLDC ஃபேன்கள் சிறந்த தீர்வாக இருக்கின்றன. குறைந்த மின்சாரம் பயன்படுத்துவதால் இன்வெர்டர் மூலம் நீண்ட நேரம் இயங்கும்.
  • சில BLDC ஃபேன்களில் முந்தைய ஸ்பீடை நினைவில் வைத்து அதனை மீண்டும் இயக்கும் போது அதே ஸ்பீடில் இயங்கும். அதே போல அதன் லைட்டில் உள்ள வண்ணங்களும் மீண்டும் இயக்கும்போது, அதே நிலைக்கு மாறி இயங்க ஆரம்பிக்கும்.

வழக்கமான ஃபேனுக்கும் BLDC ஃபேனுக்கும் என்ன வித்தியாசம்?

  • பழைய ஃபேன்களில் 50 முதல் 100 வாட் மின்சாரம் செலவாகும். ஆனால் இந்த BLDC ஃபேனில் 28 முதல் 35 வாட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.
  • மேலும் பழைய ஃபேன்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 முதல் 6 ஆண்டுகள் இருக்கும். ஆனால் இந்த BLDC ஃபேனில் 7 முதல் 10 ஆண்டுகள் இருக்கும்.
  • வழக்கமான ஃபேன்களில் சத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த BLDC ஃபேனில் 32 டெசிபல் அளவு மட்டுமே இருக்கும்.
  • பழைய ஃபேன் போல் அல்லாமல் இது இன்வெர்டர் ஃபிரெண்ட்லியாக செயல்படும்.
  • விலையும் பெரிய வித்தியாசம் இருக்காது. பழைய ஃபேன்கள் ரூ. 1200 முதல் ரூ. 1800 வரை விற்கப்பட்டால் இந்த BLDC ஃபேன் ரூ.3000 முதல் ரூ.7000 வரை விற்கப்படுகிறது.

வயிறு உப்புசத்தால் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா?
வயிறு உப்புசத்தால் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா?...
திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா !
திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா !...
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?
Amazon Great Summer Sale 2025 : இயர்பட்ஸ் வாங்கபோறீங்களா?...
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!
மக்கள் மத்தியில் திமுகவிற்கு வெற்றி முகம்.. முதல்வர் பெருமிதம்!...
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா
மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா...
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்ப அலை !...
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!
பணி அழுத்தம்... - முதுகு தண்டை பாதிக்கும் காரணங்கள்!...
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்
2027 உலகக் கோப்பையில் கோலி, ரோஹித் விளையாடுவார்களா? கம்பீர் பதில்...
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!
திருமணத்தில் ரூ.21 கோடி பரிசாக வழங்கிய மணமகள் வீட்டார்!...
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!
பேடிஎம் Q4 2025 வருவாய்: ரூ.81 கோடி லாபம்.. வெளியான விவரம்!...
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!
ஓசூர் கோயில் பிரசாதத்தில் பாம்பு.. பக்தர்கள் அதிர்ச்சி..!...