IPL 2025: வான்கடே பிட்சில் MI ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா GT..? குறுக்கே வர பிளான் செய்யும் மழை..!
Mumbai Indians vs Gujarat Titans: ஐபிஎல் 2025ன் 56வது போட்டியில், மே 6ம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இரு அணிகளும் பிளே ஆஃப் தகுதிக்கு போராடுகின்றன. வான்கடே ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. இன்றைய போட்டியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குஜராத் அணி ஹெட்-டு-ஹெட் போட்டிகளில் முன்னிலையில் உள்ளது.

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 56வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 6ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் 2025ல் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளையும், குஜராத் டைட்டன்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளையும் பெற்றுள்ளது. அதன்படி, குஜராத் மற்றும் மும்பை அணிகள் வெற்றிபெற்று பிளே ஆஃப்களுக்கு தகுதிபெற இந்த போட்டிகளில் வெற்றிபெறுவது முக்கியம். புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், பிளேயிங் லெவன், வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.
வான்கடே பிட்ச் எப்படி..?
வான்கடே ஸ்டேடியம் பொதுவாகவே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே பார்க்கப்படுகிறது. சிவப்பு மண்ணால் உருவாக்கப்பட்ட வான்கடே பிட்ச் அதிக ஸ்கோரிங் கொண்ட போட்டியாக மாற்றும். அதேநேரத்தில், குறுகிய பவுண்டரிகளும் இதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும். 2வது இன்னிங்ஸில் பனி பெய்ய வாய்ப்புள்ளதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம். வ்
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை வான்கடே ஸ்டேடியத்தில் 121 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 56 போட்டிகளிலும், 2வது பேட்டிங் செய்த அணி 65 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இங்கு அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 133 ரன்களும், ஹர்பஜன் சிங் 5/18 என்ற சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்துள்ளனர்.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 6 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக குஜராத் அணி 4 போட்டிகளிலும், மும்பை அணி 2 போட்ட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் வான்கடேவில் ஒரு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வானிலை எப்படி..?
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் வான்கடே ஸ்டேடியத்தில் இன்று மழை பெய்ய 60% வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 27 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
மும்பை இந்தியன்ஸ்:
ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
குஜராத் டைட்டன்ஸ்:
சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர், ஷாருக் கான், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், முகமது சிராஜ், ஜெரால்டு குட்ஜி, சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா