தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம் தெரியுமா?.. வானிலை அப்டேட் இதோ!!
Weather Update: இன்று முதல் ஜுன் 10ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
Tamilnadu Weather Today: தமிழகத்தில் இன்று நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 3.1 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.
இதையும் படிக்க : விசிக கேட்கும் அந்த தொகுதி.. தவெகவிடம் டீல் பேசும் திருமாவளவன்.. ரகசிய மூவ் என்ன?
இன்று கனமழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்று (ஜூன் 7) கோவை, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் மழை நிவலரம்:
தொடர்ந்து, நாளை (ஜுன் 8) தென்காசி, திருநெல்வேலி, கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜுன் 9ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், 10-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:
இன்று முதல் ஜுன் 10ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
இதையும் படிக்க : அப்போது கலைஞர் இருந்தார், இப்போது உதயநிதியால்…. மாணிக்கம் தாகூர் கடும் விமர்சனம்
சென்னை வானிலை நிவலரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.