Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

MNM Kamal Haasan: கூட்டணி மாறுகிறாரா கமல்ஹாசன்?.. 2026 தேர்தல் கணக்கு இதுதான்!

கமல்ஹாசன் 2018ல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7 ஆண்டுகளில் சென்ற அரசியல் பயணம் என்பது தொடர்ச்சியாக களத்தில் கவனிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தேர்தல் தோல்விகள், திமுகவுடனான திடீர் கூட்டணி, தொடர்ச்சியாக திமுகவுக்கு ஆதரவு அளித்து வருவது போன்றவை 2026 தேர்தலில் மாற்றம் ஏற்பட காரணமாக அமையுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

MNM Kamal Haasan: கூட்டணி மாறுகிறாரா கமல்ஹாசன்?.. 2026 தேர்தல் கணக்கு இதுதான்!
கமல்ஹாசன் Image Source: X
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Mar 2025 05:44 AM

பொதுவாக இந்திய அரசியலில் சினிமா துறையில் இருந்து வருகை தந்து கட்சி தொடங்குபவர்கள், ஏற்கனவே இருக்கும் கட்சியில் இணைபவர்கள் என நிகழ்வுகள் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படியாக தமிழ் சினிமாவில் இருந்து தடாலடியாக 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) என்ற கட்சியை தொடங்கினார். தமிழ் சினிமாவின் உலக நாயகன் என அழைக்கப்படும் கமலுக்கு திரையுலகில் அத்தனையும் அடுத்தபடியான விஷயம். இப்படி இருக்கும்போது ஜெயலலிதா (Jayalalithaa) மறைவுக்குப் பிறகு, கலைஞர் கருணாநிதி (M Karunanidhi) அரசியலில் செயல்படாமல் போன காலக்கட்டத்தில் அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு கட்சி தொடங்கினார் கமல்ஹாசன். ஆனால் கட்சி தொடங்கி 7 ஆண்டுகளில் அவர் தனது அரசியல் பாதையில் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதைக் காணலாம்.

தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தை குறிக்கும் வகையில் ஆறு கைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு இருக்கும் கொடியை அறிமுகப்படுத்திய மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் சின்னமாக பேட்டரி டார்ச் லைட் அமைந்தது.

தேர்தலும் கமலின் கூட்டணி கணக்கும்

கமல்ஹாசன் சரியாக 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக கட்சியை தொடங்கினார். 2019ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நீதி மையம் இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். அதே சமயம் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களின் நகர்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றிருந்தது கவனிக்கும்படி அமைந்தது.

இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி 142 இடங்களில் போட்டியிட்டது. இந்த தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என கமலஹாசன் உறுதியளித்திருந்தார். மேலும் அவர் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் அவர் நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டிருந்தார். (2024ல் சரத்குமார் கட்சியை பாஜகவில் இணைத்து விட்டார்). இந்த தேர்தலும் தோல்வியாகவே அமைந்தது.

திடீர் திமுக ஆதரவு

இதன் பின்னர் கமல்ஹாசன் படங்களில் முழு வீச்சில் நடிக்க தொடங்கினார். நடிப்பு ஒரு பக்கம், அரசியல் ஒரு பக்கம் என தற்போது வரை சென்று கொண்டிருக்கின்ற நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இணைந்து இந்திய அளவில் இந்தியா கூட்டணி உருவானது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என சொன்னாரோ அதே திமுக கூட்டணிக்கு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில் ஒரு மாநிலங்களவை தொகுதி தரப்படுவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. கமலும் முழு வீச்சில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டார். ஆக, வெகுவிரைவில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பார்.

இப்படியான நிலையில் கமல்ஹாசன் திமுகவிற்கு தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் களத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. எதிர்த்துப் போராட வேண்டும், எத்தனை தோல்விகள் வந்தாலும் துவண்டு விடக்கூடாது என அரசியல் பாடம் எடுக்கும் மத்தியில் கமல்ஹாசன் முடிவு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இடம் பெறுவார். அவருக்கு வேறு எங்கேயும் செல்வதற்கு இனி இடமில்லை என அரசியல் வல்லுநர்கள் அடித்துச் சொல்கின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம். அரசியல் என்பது எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற கமலின் தாரக மந்திரப்படியே அமையவும் வாய்ப்பிருக்கிறது.

மேடையில் மயங்கி விழுந்த விஷால் - அவருக்கு என்ன ஆச்சு?
மேடையில் மயங்கி விழுந்த விஷால் - அவருக்கு என்ன ஆச்சு?...
கில்..? பண்ட்..? இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்..?
கில்..? பண்ட்..? இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்..?...
வெளிநாட்டுக்கு டூர் போகணுமா? விசா இல்லாமல் பயணிக்க கூடிய நாடுகள்
வெளிநாட்டுக்கு டூர் போகணுமா? விசா இல்லாமல் பயணிக்க கூடிய நாடுகள்...
இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!
இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!...
வன்னியர் இளைஞர் பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!
வன்னியர் இளைஞர் பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!...
மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் யானைகளின் வீடியோ!
மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் யானைகளின் வீடியோ!...
ஆபத்தான முறையில் ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்!
ஆபத்தான முறையில் ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்!...
கருணாநிதிக்கு மெரினாவில் ராமதாஸால் இடம் கிடைத்தது - பாமக பாலு
கருணாநிதிக்கு மெரினாவில் ராமதாஸால் இடம் கிடைத்தது - பாமக பாலு...
சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை... அதற்கான காரணம் இதுதான்- ஜோதிகா!
சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை... அதற்கான காரணம் இதுதான்- ஜோதிகா!...
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..வெற்றியாளர் விவரம்
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..வெற்றியாளர் விவரம்...
AI உதவியுடன் தனது பெயரைத் தேர்ந்தெடுத்த புதிய போப்
AI உதவியுடன் தனது பெயரைத் தேர்ந்தெடுத்த புதிய போப்...