News9 CBC 2025: விறுவிறுப்பாக நடந்த நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. வெற்றியாளர் விவரம்!
இந்தியாவின் முன்னணி செய்தி வலையமைப்பான TV9 நடத்திய நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 நிறைவடைந்துள்ளது. பேட்மிண்டன் ஜாம்பவான் புல்லேலா கோபிசந்த் தொகுத்து வழங்கிய நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025, மே 9 ஆம் தேதி தொடங்கி மே 11 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்தியாவின் முன்னணி செய்தி நெட்வொர்க்கான TV9 நடத்திய நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 நிறைவடைந்துள்ளது. நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹைதராபாத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற புல்லேலா கோபிசந்த் பேட்மிண்டன் அகாடமியில் மூன்று நாட்கள் நடைபெற்றன. பேட்மிண்டன் ஜாம்பவான் புல்லேலா கோபிசந்தின் தலைமையில் நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் மே 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி மே 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. நாடு முழுவதிலுமிருந்து வந்த பல்வேறு கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையைக் காட்டினர்.
பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகு, பரிசு வழங்கும் விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பேட்மிண்டன் ஜாம்பவான் புல்லேலா கோபிசந்த் வாழ்த்தினார். இந்த நிகழ்வில் பல பிரபலங்களும் பங்கேற்று விளையாட்டு வீரர்களை வாழ்த்தினர்.
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025 வெற்றியாளர்கள் விவரம்
ஆண்கள் அணி சாம்பியன்ஷிப்
- வெற்றியாளர் – இன்ஃபோசிஸ்
- இரண்டாம் இடம் – மைக்ரோசாப்ட்
- மூன்றாம் இடம் – ஃபின் மார்க்கெட்
ஓபன் சாம்பியன்ஷிப்
ஆண்கள் ஒற்றையர்
- வெற்றியாளர் – மைக்ரோசாப்ட் – லௌஹித்
- இரண்டாம் இடம் – இன்ஃபோசிஸ் – அனுராக்
- மூன்றாம் இடம் – இன்ஃபோசிஸ் – பாரத்
பெண்கள் ஒற்றையர்
- வெற்றியாளர் – என் ரங்கா ராவ் & சன்ஸ் (சைக்கிள் அகர்பத்தி) – சின்மயி
- இரண்டாம் இடம் – குவால்காம் – பூமிகா
- மூன்றாம் இடம் – டிபிஎஸ் நாச்சரம் – பிரமதா
கலப்பு இரட்டையர்
- வெற்றியாளர் – இன்ஃபோசிஸ்
- இரண்டாம் இடம் – மைக்ரோசாப்ட்
- மூன்றாம் இடம் – ஃபின் மார்க்கெட்
டிவி9 நிர்வாக இயக்குநர் பருண் தாஸ் நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2025ஐ 2025, மே 9 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் TV9 தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் மற்றும் TV9 தெலுங்கு நிர்வாக ஆசிரியர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடந்த இந்த பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 64 அணிகள் பங்கேற்ற நிலையில் போட்டிகள் ஒவ்வொன்றும் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது.
இந்த பேட்மிண்டன் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 1.50 லட்சம் வழங்கப்படும். அதேபோல் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 1 லட்சம் மற்றும் மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 50 ஆயிரம் வரை பரிசுத்தொகை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.