பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்து.. ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்தார் முதலமைச்சர்!
Train Hit School Bus in Cuddalore | கடலூரில் பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு ரூ.1 லட்சமும் அறிவித்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
கடலூ, ஜூலை 08 : கடலூரில் (Cuddalore) பள்ளி பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்த மாணவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) இழப்பீடு அறிவித்துள்ளார். அதன்படி, விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
பள்ளி பேருந்து மோதிய ரயில் – 3 மாணவர்கள் பலி
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயற்சி செய்த போது ரயில் மோதி கடும் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தர். பள்ளி பேருந்தில் மொத்தம் 4 மாணவர்கள், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என 6 பேர் பயணம் செய்த நிலையில், 6 வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்துள்ள 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்…
— M.K.Stalin (@mkstalin) July 8, 2025
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர, உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு நிவாரணமும் அறிவித்துள்ளார்.
அதன்படி விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.