Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அதிக லக்கேஜுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Southern Railway announcement: தெற்கு ரெயில்வே, ரயில் பயணங்களில் சுமை வரம்புகளை அறிவித்துள்ளது. நிர்ணயத்தை மீறி 10-15 கிலோ கூடுதல் எடைக்கு, ஒவ்வொரு கிலோவுக்கும் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். வெடிபொருட்கள் மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறையின் அமல்படுத்தலை டிக்கெட் பரிசோதகர்கள் நேரடியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக லக்கேஜுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
அதிக லக்கேஜுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 14 Apr 2025 07:15 AM

சென்னை ஏப்ரல் 14: சென்னையில் (Chennai) இருந்து அதிக எண்ணிக்கையில் பயணிகள் கோடை விடுமுறைக்காக (Summer Holiday) செல்லும் சூழ்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு மேல் சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகள் மீது தெற்கு ரெயில்வே (Southern Railways announcement)  கட்டுப்பாடு விதித்துள்ளது. ஏ.சி. வகுப்புகளுக்கு 70, 50, 40 கிலோ என சுமை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன; இரண்டாம் வகுப்பு பெட்டியில் 35 கிலோ வரையிலான சுமை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. 10 முதல் 15 கிலோ வரை கூடுதல் சுமைக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரெயில்வே கட்டுப்பாடு விதித்துள்ளது. வெடிபொருட்கள் (Explosives) மற்றும் தீயில் எளிதில் பற்றக்கூடிய பொருட்கள் ரயிலில் தடைசெய்யப்பட்டுள்ளன. சுமைகள் எடைமதிப்பீடு செய்யும் நடைமுறை குறித்த ஆலோசனைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.

ரயில் பயணத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம், 1.5 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களை ஒவ்வொரு நாளும் மூன்றே காலத்தில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கோடை விடுமுறை மற்றும் விழா நாட்களில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

சுமை கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள்

பயணிகள் வெடிபொருட்கள், தீப்பற்றக்கூடிய மற்றும் ரசாயன பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், ரெயில்களில் செல்லும் பயணிகள் தங்களது சுமைகளை குறிப்பிட்ட அளவில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். தற்போது, ஏ.சி. முதல் வகுப்பு பெட்டியில் 70 கிலோ, இரண்டாம் வகுப்பு ஏ.சி.யில் 50 கிலோ, மூன்றாம் வகுப்பு ஏ.சி.யில் 40 கிலோ, மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டியில் 40 கிலோ, இரண்டாம் வகுப்பு பெட்டியில் 35 கிலோ வரையிலான சுமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

கூடுதல் சுமைக்கு கட்டண விதி

இந்த அளவை மீறி கூடுதல் சுமைகளை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் எடைக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், பயணிகள் கொண்டு வரும் சுமைகளை கணக்கிடும் முறை குறித்த ஆலோசனைகள் தற்போது தெற்கு ரெயில்வே அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டணம் தொடர்பான வழிகாட்டுதல்

  • ஏ.சி. முதல் வகுப்பு பயணிகள்: 70 கிலோ வரை சுமை அனுமதி.
  • ஏ.சி. இரண்டாம் வகுப்பு பயணிகள்: 50 கிலோ வரை சுமை அனுமதி.
  • ஏ.சி. மூன்றாம் வகுப்பு பயணிகள்: 40 கிலோ வரை சுமை அனுமதி.
  • முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டியில் பயணிப்பவர்கள்: 40 கிலோ வரை சுமை அனுமதி.
  • இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிப்பவர்கள்: 35 கிலோ வரை சுமை அனுமதி.

நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்லும் பயணிகளிடம், ஒவ்வொரு கிலோவுக்கும் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த விதிமுறையின் அமல்படுத்தலை டிக்கெட் பரிசோதகர்கள் நேரடியாக கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..?
கோடை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கலாமா..?...
தேமுதிகவில் இருந்து விலகும் நல்லதம்பி? கடிதத்தில் சொன்னது என்ன?
தேமுதிகவில் இருந்து விலகும் நல்லதம்பி? கடிதத்தில் சொன்னது என்ன?...
குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?...
”நடிகராக இருக்க லாயக்கு இல்ல" யோகி பாபுவை சாடிய தயாரிப்பாளர்
”நடிகராக இருக்க லாயக்கு இல்ல
குரு மற்றும் சூரியனின் சேர்க்கை.. அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள்!
குரு மற்றும் சூரியனின் சேர்க்கை.. அதிர்ஷ்டம் கொட்டும் ராசிகள்!...
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்... பாதுகாப்பாக இருப்பது எப்படி?
அக்னி நட்சத்திரம் நாளை தொடக்கம்... பாதுகாப்பாக இருப்பது எப்படி?...
மதச் சடங்கில் நடந்த சம்பவம்.. உயிரிழந்த 3 வயது குழந்தை!
மதச் சடங்கில் நடந்த சம்பவம்.. உயிரிழந்த 3 வயது குழந்தை!...
கோடை டூர்: திருப்பூரை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன?
கோடை டூர்: திருப்பூரை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் என்னென்ன?...
அடாவடி காட்ட காத்திருக்கும் மழை.. CSK vs RCB போட்டி நடைபெறுமா?
அடாவடி காட்ட காத்திருக்கும் மழை.. CSK vs RCB போட்டி நடைபெறுமா?...
நியூ லுக்கில் விஜய்.. ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் வீடியோ வைரல்!
நியூ லுக்கில் விஜய்.. ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் வீடியோ வைரல்!...
இறக்குமதிக்கு தடை போட்ட இந்தியா.. பாகிஸ்தானுக்கு நெருக்கடி!
இறக்குமதிக்கு தடை போட்ட இந்தியா.. பாகிஸ்தானுக்கு நெருக்கடி!...