Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Weather Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

Chennai Meteorological Department: தமிழகத்தில் 2025 ஏப்ரல் 14 மற்றும் 15 ஏப்ரல் தேதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாகவும், சில மாவட்டங்களில் வெப்பஅலைவீச்சும் ஏற்படலாம் எனவும் சென்னையில் மேகமூட்டத்துடன், வெப்பநிலை 38°C வரை இருக்கலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்புImage Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 14 Apr 2025 06:37 AM

தமிழ்நாடு ஏப்ரல் 14: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் தாறுமாறாக அதிகரித்து வருவது மக்கள் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. பல இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ள நிலையில், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலையே நிலவி வருகிறது. இதனால் வேலைக்குச் செல்லும் மக்களும், தனியார் வாகன பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும் 14-04-2025 மற்றும் 15-04-2025 நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இந்த மழை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மொத்தம் 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் வெப்பம் சற்று குறையும் என்ற நம்பிக்கையும் மக்களில் நிலவி வருகிறது. இந்நிலையில், ஓரிரு இடங்களில் மழை பெய்து வெப்பத்தை குறைக்கும் அளவுக்கு குளிர்வளிக்க தொடங்கியுள்ளது.

கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை

வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி அறிக்கையில், “கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கமாக இன்று (14-04-2025) மற்றும் நாளை (15-04-2025) தமிழகத்தில் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஏப்ரல் 15 முதல் 19 வரை, ஒருசில இடங்களில் மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு

13-04-2025 மற்றும் 14-04-2025: தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

15-04-2025 முதல் 19-04-2025 வரை: தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும்.

அதிகபட்ச வெப்பநிலை உயர்வு

14-04-2025 முதல் 17-04-2025 வரை: தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, 14-04-2025 முதல் 15-04-2025 வரை, வெப்பநிலை இயல்பு நிலையைவிட 2°C முதல் 4°C வரை அதிகமாக இருக்கலாம்.

வெப்ப அலை எச்சரிக்கை

இன்றைய தினத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பத்துடனும், அதிக ஈரப்பதத்துடனும் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகலாம் எனவும், தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளையும் (15-04-2025) வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாகவே இருந்து, சில பகுதிகளில் மக்கள் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

14-04-2025: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பத்துடன் கூடிய ஈரப்பதமான சூழ்நிலை காணப்படும். இதனால் பொதுமக்களுக்கு சோர்வு மற்றும் உடல் அசவுகரியம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் வெப்பஅலை வீசும் வாய்ப்பும் உள்ளது.

2025 ஏப்ரல் 14 மற்றும் 15 ஏப்ரல்: வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாகவே இருந்து, சில பகுதிகளில் மக்கள் சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை

2025 14 ஏப்ரல்: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38°C முதல் 39°C வரை இருந்தாலும், குறைந்தபட்சம் 28°C முதல் 29°C வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!...
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!...
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!...
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!...
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?...
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு...
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?...
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!...
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்...
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!...
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!...