தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. குறையும் வெப்பநிலை.. மழைக்கான வாய்ப்பு எப்படி உள்ளது?
Weather Report: அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நாளை தொடங்க இருக்கும் நிலையில் நாளை (மே 4, 2025) முதல் ஒரு வார காலத்திற்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் அன்றாட வேலையை செய்வது கூட கடினமாக உள்ளதாக மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் 2025 மே 3 தேதி மற்றும் 2025 மே 4 தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொல்வது என்ன?
Kathiri illa tha veyil to continue in TN. Rare hit or miss rains possible in some parts of KTCC next 24 hrs. Next one week temp to reduce gradually as rains will make the heat less in TN
—————
Kathri Veyil period is starting from tomorrow but the rains which is…— Tamil Nadu Weatherman (@praddy06) May 3, 2025
இந்நிலையில் நாளை (மே 4, 2025) அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தொடங்க இருக்கும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்றும், வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு மிகவும் குறைவு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு வார காலத்திற்கு தமிழகத்தில் பெய்யக்கூடிய கோடை மழையானது வெப்பநிலையை தணிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெப்பநிலையானது சற்று குறைந்து காணப்பட்டதாகவும், வேலூர் மாவட்டத்தில் 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்
2025 மே 3 தேதியான இன்று வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் குழித்துறை கன்னியாகுமரி மாவட்டம், வெம்பக்கோட்டை விருதுநகர் மாவட்டம், கோடநாடு நீலகிரி மாவட்டத்தில் தல ஐந்து சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கருப்பாநதியானை தென்காசி மாவட்டம், ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், வால்பாறை கோயம்புத்தூர் மாவட்டத்தில் நான்கு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்க பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது