Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Ooty Traffic Restrictions: நாளுக்குநாள் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

Ooty Summer Rush: ஊட்டியில் கோடைக்கால சுற்றுலா அதிகரிப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், குன்னூர் மலைப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் நகருக்குள் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை அனுமதி இல்லை. கோடை காலம் முடியும் வரை இந்தக் கட்டுப்பாடுகள் நீடிக்கும். சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும்.

Ooty Traffic Restrictions: நாளுக்குநாள் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
ஊட்டியில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்புImage Source: Rajapaarvay/Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 03 May 2025 17:02 PM

ஊட்டி, மே 3: தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்த கோடையில் இருந்து தப்பிக்க விடுமுறை காலம் என்பதால் பலரும் கொடைக்கானல் (Kodaikanal) மற்றும் ஊட்டி (Ooty) போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த கோடை சீசனில் விடுமுறைக்காக ஊட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக, அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில், கோடைக்காலம் (Summer) முடியும் வரை ஊட்டி செல்வோருக்கு சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

கட்டுப்பாடுகள்:

உதகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா வெளியிட்ட கட்டுப்பாடுகள்:

  • கோடை சீசனில் ஊட்டி வரும் வாகனங்கள் அனைத்து குன்னூர் மலைப்பாதை வழியாக மட்டும் வர வேண்டும்.
  • கோடைக்காலம் முடியும் வரை ஊட்டிக்கு வரும் குன்னூர் மலைப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
  • அதேநேரத்தில், ஊட்டியில் இருந்து கீழே இறங்கும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி மலைப்பாதை வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.
  • சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் கவனத்துடன் மெதுவாக தங்களது வாகனங்களை இயக்கி செல்வது நல்லது.
  • ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் விதிக்க காரணம் என்ன..?

கடந்த 2025 மே 1ம் தேதி முதல் 2025 மே 4ம் தேதி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் ஊட்டியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் விளைவாக நேற்று அதாவது 2025 மே 2ம் தேதி ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா தோட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் நிரம்பி வழிந்தன. அதேநேரத்தில், இந்த இடங்களில் நுழைவு சீட்டுகள் பெறவும், படகு சவாரி செய்யவும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடந்த 3 நாட்களும் ஊட்டியில் உள்ள வணிக சாலை, கலெக்டர் சாலை, பேருந்து நிலை, ஊட்டி – குன்னூர் சாலைகளில் சுமார் 3 கி.மீ தூரம் வரை இருபுறமும் வாகனங்கள் வரியாக நின்றன. இதனால், ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்பட்டன.

ஊட்டியில் இ பாஸ் முறையானது வருகின்ற 2025 ஜூன் 30 வரை அமலில் உள்ளது. அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் 6,000 வாகனங்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை இருக்குமா?
தொடங்கியது அக்னி நட்சத்திரம்.. வெப்ப அலை இருக்குமா?...
வெயிலுக்கு ரெஸ்ட்.... வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?
வெயிலுக்கு ரெஸ்ட்.... வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?...
உடல் எடையைக் குறைத்தது எப்படி? நடிகை சாராவின் சீக்ரெட்
உடல் எடையைக் குறைத்தது எப்படி? நடிகை சாராவின் சீக்ரெட்...
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!...
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!...
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!...
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!...
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?...
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு...
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?...
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!...