Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sara Ali Khan : 45 கிலோ வரை எடை குறைத்தது எப்படி? சீக்ரெட் சொன்ன சாரா

Sara’s Fitness Transformation : பாலிவுட் நடிகர் சயிப் அலிகானின் மகளான சாரா அலிகான் 'கேதார்நாத்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் திரைத்துறையில் கால் பதித்தார். இந்த நிலையில் கட்டுப்பாடுடன் கூடிய உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி வழியாக அவர் சுமார் 45 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். இந்த நிலையில் நேர் காணல் ஒன்றில் அவர் எப்படி உடல் எடை குறைத்தார் என்பது குறித்து பேசியிருக்கிறார்.

Sara Ali Khan : 45 கிலோ வரை எடை குறைத்தது எப்படி? சீக்ரெட் சொன்ன சாரா
சாரா அலிகான்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 04 May 2025 00:05 AM

பாலிவுட் நடிகர் சயீப் அலிகானின் (Saif Ali Khan) மகள் சாரா அலி கான் (Sara Ali Khan), பாலிவுட்டில் (Bollywood) தனக்கெ மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார். இவர் கேதார்நாத் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷிற்கு ஜோடியாக அட்ராங்கி ரே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கிறார். இந்த நிலையில் தான் ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி மூலம் நான் 45 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். பாலிவுட் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கும் இவர் தனது உணவு பழக்கத்தை பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். பாலிவுட் சேனல் ஒன்றுக்கு இவர் அளித்த பேட்டியில் தான் ஒரு பெரிய உணவுப் பிரியர் என்று கூறியிருந்தார்.

அந்த பேட்டியில், ”நான் ஒரு உணவுப் பிரியை. வித விதமான உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுவேன். ஆனால் அது எனது எடை அதிகரிப்பிற்கும் பிசிஓடி (PCOD) பிரச்னைக்கும் காரணமாக அமைந்தது என்று அவர் தெரிவித்தார்.  மேலும் ஆரோக்கியமான உணவு மற்றும் கடுமையான உடற்பயிற்சிஆகியவை  எனக்கு எடையைக் குறைக்கவும் PCOD-யின் பாதிப்பை கட்டுப்படுத்தவும் உதவியது. 96 கிலோ வரை எடை அதிகரித்த நான், கடுமையான உணவுக் கட்டுப்பாட்டால் தற்போது 45 கிலோ வரை எடை குறைத்தேன். நான் உடல் எடையை ஈஸியாக குறைத்து விடவில்லை.”  என்றார்.

சாராவின் இன்ஸ்டா பதிவு

 

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

”நான் அதிக எடை கொண்டவள் அல்ல. பின்னர் மோசமான உணவுப் பழக்கம் காரணமாக எனது உடல் எடை அதிகரித்தது.  ஒரு கட்டத்தில், என் எடை 85 கிலோவிலிருந்து 96 கிலோவாக அதிகரித்தது. அப்போது தான் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை நோக்கி போவது எளிது, ஆனால் மீண்டு வருவது மிகவும் கடினம் என புரிந்து கொண்டேன்.” என்றார்.

உணவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு

 

 

View this post on Instagram

 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

உணவில் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் அதிக புரத உணவுகளை எடுத்துக்கொண்டேன். நான் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே கார்போஹைட்ரேட் உணவை சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். குறிப்பாக மதிய நேரம் மட்டுமே சாப்பிடுவேன்.  மேலும் என் உணவில் அதிக புரத உணவுகள் சேர்க்கப்பட்டன. நார்ச்சத்து நிறைந்த பழங்களும் இதில் அடங்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் வகையில், கொத்தமல்லி, சீரகத் தண்ணீர் போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட ஸ்மூத்திகளை உணவில் சேர்த்துக்கொண்டேன். மேலும் தனது நாளை கிரீன் டீ மூலம் தொடங்குவேன். அல்லது சில நாட்களில் எலும்பிச்சை சாறு கலந்த வெந்நீர் அருந்துவேன்.

இப்படி உணவு பழக்கத்தை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாமல் கடினமான உடற்பயிற்சிகளையும் செய்தேன். பளு தூக்குதல், யோகா மற்றும் பைலேட்ஸ் ஆகியவற்றுடன் கார்டியோ பயிற்சிகளிலும் சிறப்பு கவனம் செலுத்தினேன் என்று தெரிவித்தார்.

ரெட்ரோ படத்தை ரஜினியிடம் காட்ட திட்டமிட்டுள்ள இயக்குநர்
ரெட்ரோ படத்தை ரஜினியிடம் காட்ட திட்டமிட்டுள்ள இயக்குநர்...
அக்னி நட்சத்திரம்.. நாம் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
அக்னி நட்சத்திரம்.. நாம் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?...
வீராணம் ஏரியில் நுரை பொங்கி வரும் நீர்! விவசாயிகள், மக்கள் அச்சம்
வீராணம் ஏரியில் நுரை பொங்கி வரும் நீர்! விவசாயிகள், மக்கள் அச்சம்...
எல்லையில் பரபரப்பு.. சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்!
எல்லையில் பரபரப்பு.. சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்!...
ஊட்டிக்கு டூர் போறீங்களா? இன்னொரு ஸ்பெஷல் காத்திருக்கு...
ஊட்டிக்கு டூர் போறீங்களா? இன்னொரு ஸ்பெஷல் காத்திருக்கு......
துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? - வழிபாடு முறைகள் இதோ!
துன்பங்களை போக்கும் வாசவி ஜெயந்தி எப்போது? - வழிபாடு முறைகள் இதோ!...
ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் பலி
ஆம்னி வேனும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பேர் பலி...
அமைச்சர்கள் சென்னையில் இருக்கக்கூடாது முதலமைச்சர் ஸ்டாலின் கறார்
அமைச்சர்கள் சென்னையில் இருக்கக்கூடாது முதலமைச்சர் ஸ்டாலின் கறார்...
ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்... கார் ஏற்றி ஒருவர் கொலை
ஆன்லைன் ரம்மியால் வெடித்த மோதல்... கார் ஏற்றி ஒருவர் கொலை...
மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்.. சிக்கியது எப்படி?
மனைவியை கொன்று நாடமாடிய ஜிம் மாஸ்டர்.. சிக்கியது எப்படி?...
தமிழ் சினிமாவின் பேரழகி.. நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவின் பேரழகி.. நடிகை த்ரிஷா பிறந்தநாள் இன்று!...