கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி? வீட்டிலேயே ஈஸியா கண்டுபிடிக்கலாம்!
Detect Harmful Mango Chemicals : கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் சந்தைக்கு மாம்பழங்கள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. அனைவராலும் விரும்பப்படும் மாம்பழங்கள் சில இடங்களில் கார்பைடு மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்படுகின்றன. அதனை வீட்டிலேயே எளிய பரிசோதனைகள் மூலம் எப்படி கண்டுபிடிப்பது என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கோடை காலம் (Summer) தொடங்கி விட்டாலே அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது மாம்பழங்கள் (Mango) தான். சேலத்து மாம்பழம், மல்கோவா மாம்பழம் என விதவிதமான மாம்பழங்கள் சந்தைகளை நிரப்ப தொடங்கியிருக்கின்றன. மாம்பழத்தின் சுவை மிகவும் அலாதியானது என்பதால் அதனை விரும்பாதவர்களே இல்லை எனலாம். ஆனால் மாம்பழத்தில் உள்ள பிரச்னை என்னவென்றால் சில நேரங்களில் அதனை போலியாக பழுக்க வைத்து விற்கப்படும் மாம்பழங்கள் தான். சில பழங்கம் கார்பைடு (Carbide) பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்டிருக்கும் பழங்கள் சுவை குறைவதோடு உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். ஆனால் எந்த மாம்பழங்கள் கார்பைடு பயன்படுத்தப்படவில்லை என்பதை கணிப்பது கடினம்.
இந்த சந்தேகத்தை போக்கும் வகையில் புகழ்பெற்ற லைஃப்ஸ்டைல் கோச் லூக் கவ்டினோ என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில பரிசோதனை முறைகளை பகிர்ந்துள்ளார். இந்த சோதனைகள் மூலம் கார்பைடு கலந்த மாம்பழங்களை அடையாளம் காணலாம் என அவர் சொல்கிறார். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கார்பைடு பயன்படுத்தப்பட்ட பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?
View this post on Instagram
- லூக் கவ்டினோ முதலில், மாம்பழத்தின் தோலை கவனமாக பாருங்கள் என்கிறார். பழத்தின் நிறம் எல்லா பக்கமும் ஒரே மாதிரியாக இருக்கும்போது அது இயற்கையாக பழுத்த பழம் என்கிறார். ஆனால், தோலில் சிறிய கருப்பு புள்ளிகள் அல்லது கீறல்கள் தெரிந்தால், அது கார்பைடு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிறார்.
- அதே போல மாம்பழத்தை ஒதுக்கி அழுத்தி பாருங்கள் என்கிறார். இயற்கையாக பழுத்த மாம்பழம் கடினமாக இருக்காது. உறுதித் தன்மை குறைவாகவும் மென்மையாகவும் இருக்கும். கார்பைடால் பழுத்த பழம் உறுதியாக இல்லாமல் வழக்கத்தை விட அதிக மென்மையாக இருக்கும் என அவர் சொல்கிறார்.
- ஒரு தண்ணீர் நிரம்பிய ஜாரில் மாம்பழத்தை போட்டு பாருங்கள் என்கிறார். மாம்பழம் ஜாரில் கீழே போனால் அது இயற்கையாக பழுத்த பழம் என்றும் அர்த்தம். அதே பேல மாம்பழமானது தண்ணீரில் மிதந்தால் அது கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழம் என்று அர்த்தம் என்று அவர் தெரிவித்தார்.
இது மிகவும் எளிமையான பரிசோதனை. எல்லோரும் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒன்று. உங்கள் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவராலும் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடியும். இந்த பரிசோதனைகள் அதிகபட்சம் சரியாக முடிவைத் தரும். ஆனால் இது முழுமையான பரிசோதனை அல்ல என்று லூக் கவ்டினோ எச்சரிக்கிறார்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)