Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கடை பெயர்கள் தமிழில் இல்லையா? ரூ.2,000 அபராதம்.. மாநகராட்சி அதிரடி!

Chennai Corporation : தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளதாக தெரிகிறது. மேலும், கேட்டரிங் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை, சென்னை மாநகராட்சி சார்பில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடை பெயர்கள் தமிழில் இல்லையா? ரூ.2,000 அபராதம்.. மாநகராட்சி அதிரடி!
சென்னை மாநகராட்சி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 May 2025 07:30 AM

தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதேபோல, தமிழ் பெயர் பலகைகள் இல்லாத கேட்டரிங் கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளளது. கடைகளுக்கு தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி கூறி வருகிறது. பொது இடங்களில் தமிழை பயன்படுத்தும் நோக்கில், கடைகளில் ஆங்கிலம் பெயர் வைக்காமல், தமிழ்ப் பெயர் பலகை வைக்க வேண்டும் என ஏற்கனவே பலமுறை உத்தரவை மாநகராட்சி பிறப்பித்து வருகிறது.  இந்த சூழலில், தற்போது முக்கிய முடிவைவ சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது.

கடை பெயர்கள் தமிழில் இல்லையா?

அதாவது, தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கூற்றுப்படி, 1948 தமிழநாடு மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி, தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராரம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.

1958 தமிழ்நாடு உணவு சட்டத்தின்படி, தமிழ் பெயர் பலகை இல்லாத உணவு கடைகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். கடைகளில் தமிழ், ஆங்கிலம், மூன்றாவது மொழி என 5:3:2 என்ற விகிதத்தில் கடைகளின் பெயர்கள் இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

பொது இடங்களில் தமிழைப் பயன்படுத்துவதற்கான மாநில அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர்கள், தொழிலாளர் துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், தமிழ் வளர்ச்சித் துறை ஊழியர்கள் மற்றும் வர்த்தக மற்றும் உணவு சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறை குறித்து வணிகர்களுக்கு தெரிவிக்க தொழிலாளர் ஆணையர் ராமன் தலைமையில் கூட்டம் நடைபெற்றறது. இதில் தொழிலாளர் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். வருவாய் மற்றும் நிதித்துறை துணை ஆணையர் பிரதிவிராஜ் கூறுகையில், “இந்தக் கூட்டம் அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தக உரிமதாரர்களுக்கான விழிப்புணர்வு அமர்வாக இருந்தது.

ரூ.2,000 அபராதம்.. மாநகராட்சி அதிரடி

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டனர். இதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டது. இதனை கடைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய சென்னை மாநகராட்சி ஆய்வு மேற்கொள்ளும்” என்று கூறினார். சென்னை மாநகராட்சி துணை மேயர் எம். மகேஷ் குமார் கூறுகையில், “பல ஆண்டுகளாக, விற்பனையாளர்களிடையே தமிழ் விளம்பரப் பலகைகளை கட்டாயமாக்குவதில் சென்னை மாநகராட்சி தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் பேசும் சமூகத்தில் ஒரு சிலருக்கு ஆங்கிலம் படிக்க தெரியாமல் இருக்கலாம். ஆங்கில விளம்பரப் பலகைகளுடன் கூடுதலாக தமிழ் விளம்பரப் பலகைகளும் இருப்பது சிறப்பாக இருக்கும்” என்றார். இதன் மூலம், சென்னையில் விரையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

மேலும், விதியை மீறும் கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 இன் கீழ், கடையின் உரிமை ரத்து செய்யப்படும் அல்லது நடவடிக்கை எடுப்பதற்கு முன் பதிலளிக்க ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

சூர்யாவின் ஸ்டைலில் பூஜா ஹெக்டே... ரசிகர்களைக் கவரும் வீடியோ!
சூர்யாவின் ஸ்டைலில் பூஜா ஹெக்டே... ரசிகர்களைக் கவரும் வீடியோ!...
ஜம்மு காஷ்மீர் முதல்வரை சந்தித்த PM மோடி.. பதட்டத்தில் பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர் முதல்வரை சந்தித்த PM மோடி.. பதட்டத்தில் பாகிஸ்தான்...
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள்!
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள்!...
கோடை மழையில் நனைந்தால் உங்களை நோய்வாய்ப்படுத்துமா? உண்மை இதுதான்!
கோடை மழையில் நனைந்தால் உங்களை நோய்வாய்ப்படுத்துமா? உண்மை இதுதான்!...
நடிகர் துருவ் விக்ரமின் பைசன் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
நடிகர் துருவ் விக்ரமின் பைசன் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?...
விஜய் சேதுபதி - நித்யா மேனனின் தலைவன் தலைவி படத்தின் டீசர்!
விஜய் சேதுபதி - நித்யா மேனனின் தலைவன் தலைவி படத்தின் டீசர்!...
இனி UPI மூலம் ஸ்பீடா பணம் அனுப்பலாம் - வரவிருக்கும் புதிய அப்டேட்
இனி UPI மூலம் ஸ்பீடா பணம் அனுப்பலாம் - வரவிருக்கும் புதிய அப்டேட்...
CSK-க்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்! கலக்க காத்திருக்கும் கோலி
CSK-க்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்! கலக்க காத்திருக்கும் கோலி...
 போப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? AI படத்தால் சர்ச்சை!
 போப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? AI படத்தால் சர்ச்சை!...
மருதாணி: வெடிப்புற்ற குதிகாலை சரியாக்குமா? மருத்துவரின் ஆலோசனை
மருதாணி: வெடிப்புற்ற குதிகாலை சரியாக்குமா? மருத்துவரின் ஆலோசனை...
அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!
அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!...