Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? போக்குவரத்து துறை அறிவிப்பு

Tamilnadu Bus Travel Guidelines: தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளின் பேருந்துப் பயணத்தை எளிதாக்கும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பேருந்துகளில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர வழிவகை செய்ய வேண்டும், இறங்கும் வரை உதவி செய்ய வேண்டும், கட்டணச் சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளடங்கும்.

மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? போக்குவரத்து துறை அறிவிப்பு
மாற்றுத் திறனாளி பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 03 May 2025 06:35 AM

தமிழ்நாடு மே 03: மாற்றுத் திறனாளிகள் (Differently-abled passengers) பேருந்தில் பயணிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் (Bus travel guidelines) குறித்து, முதல்வர் ஸ்டாலின் (Tamilnadu CM Stalin) உத்தரவின்படி, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் (Transport Minister Sivasankar) புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளை காணும் போதே பேருந்தை நிறுத்தி ஏற்றவேண்டும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமரச்செய்து, இறங்கும் வரை உதவ வேண்டும். கட்டண சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; ID கார்டு கொண்டவர்கள் மற்றும் அவர்களின் துணையாளர் ஒருவருக்கு கட்டணமில்லா பயண அனுமதி வழங்கப்பட வேண்டும். நடைமுறைகள் பின்பற்றப்படாத புகார்கள் அதிகரித்துள்ளதால், இவை கண்டிப்பாக கடைபிடிக்க பணியாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை

மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் பயணிக்கும்போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கடைபிடிக்க வேண்டிய இயக்க நடைமுறைகளை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, போக்குவரத்து மற்றும் மின் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அவர்கள் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் சுற்றறிக்கைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் நடைமுறைகள் பின்பற்றப்படாமல் சில புகார்கள் எழுந்துள்ளன என்பதால், மீண்டும் ஒருமுறை தெளிவாக நடைமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.

முக்கியமான நடைமுறைகள்

பேருந்து நிறுத்தங்களில் கவனம்: மாற்றுத் திறனாளிகள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தால், அவர்களை ஏற்றும் வகையில் பேருந்தை சரியான இடத்தில் நிறுத்த வேண்டும்.

இடவசதி மறுப்பு கூடாது: “இடமில்லை” என்ற காரணம் கூறி, மாற்றுத் திறனாளிகளை பேருந்தில் ஏற விடாமல் தவிர்க்கக்கூடாது.

இருக்கைகள் ஒதுக்கீடு: மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் தெரியுமாறு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அவற்றில் அமரச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.

இறங்கும் வரை உதவி: பயணச்சீட்டு வழங்கிய பின், இறங்க வேண்டிய இடத்தில் பேருந்தை நிறுத்தி, அவர்கள் இறங்கும் வரை உதவிசெய்து, பின் பேருந்தை இயக்க வேண்டும்.

மற்ற பயணிகள் ஒழுங்கு: சாதாரண பயணிகள் ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தால், அவர்களை மாற்றி மாற்றுத் திறனாளிகளை அமரச்செய்ய வேண்டும்.

அன்பும் மரியாதையும் அவசியம்: பேசும் முறையில் மரியாதை தவறாமல் இருக்க வேண்டும். ஏளனம், கோபம், இழிவாக பேசக் கூடாது.

பாதுகாப்பான ஏற்றம்/இறக்கம்: பேருந்தில் ஏறும்போது மற்றும் இறங்கும்போது, நடத்துநர் கண்காணித்து ஓட்டுநருக்கு சமிக்ஞை கொடுக்க வேண்டும்.

கட்டணச் சலுகைகள்: இந்திய அரசு அங்கீகரித்த அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவர், சதவீத கட்டண சலுகை அல்லது கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.

பயண எல்லை இல்லா சலுகை: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் புறநகர் பேருந்துகளில் பயண எண்ணிக்கைக்கான வரம்பில்லாமல் 75% கட்டண சலுகையுடன் பயணிக்கலாம்.

இயற்கை சீற்றத்தில் தனிப்பட்ட பரிவு: மழை, இரவு நேரம் போன்ற சூழ்நிலைகளில், தேவைக்கேற்ப மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு நின்று ஏறும் வசதி வழங்கப்பட வேண்டும்.

மாதாந்த பயிற்சி முகாம்கள்: ஒவ்வொரு மண்டலத்திலும் நடைபெறும் பயிற்சி முகாம்களில் மாற்றுத் திறனாளி ஒருவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டியவை எனத் தெரிவிக்கப்பட்டு, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் அவற்றை கண்காணிக்கத் திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

CSK-க்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்! கலக்க காத்திருக்கும் கோலி
CSK-க்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்! கலக்க காத்திருக்கும் கோலி...
 போப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? AI படத்தால் சர்ச்சை!
 போப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? AI படத்தால் சர்ச்சை!...
மருதாணி: வெடிப்புற்ற குதிகாலை சரியாக்குமா? மருத்துவரின் ஆலோசனை
மருதாணி: வெடிப்புற்ற குதிகாலை சரியாக்குமா? மருத்துவரின் ஆலோசனை...
அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!
அது தத்தெடுத்த குழந்தை இல்லையா.. நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட பதிவு!...
நாளுக்குநாள் அதிகரிக்கும் பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடு!
நாளுக்குநாள் அதிகரிக்கும் பயணிகள்.. ஊட்டியில் புதிய கட்டுப்பாடு!...
சிறப்பாக நடைபெற்ற சிம்புவின் STR 49 படத்தின் பூஜை!
சிறப்பாக நடைபெற்ற சிம்புவின் STR 49 படத்தின் பூஜை!...
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா?
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா?...
லார்ட்ஸில் 3வது முறை WC இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்..!
லார்ட்ஸில் 3வது முறை WC இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்..!...
மணிரத்னம் சார் போல இயக்குனர் கிடைத்திருந்தால்... - சிம்பு!
மணிரத்னம் சார் போல இயக்குனர் கிடைத்திருந்தால்... - சிம்பு!...
மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள்!
மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள்!...
தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. வெப்பநிலை குறையும் என அறிவிப்பு..
தொடங்கும் அக்னி நட்சத்திரம்.. வெப்பநிலை குறையும் என அறிவிப்பு.....