Silambarasan : சிறப்பாக நடைபெற்ற சிம்புவின் STR 49 படத்தின் பூஜை.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?
STR 49 Movie Shooting Pooja : நடிகர் சிலம்பரசனின் முன்னணி நடிப்பில் உருவாக்கவுள்ள படம் STR 49. இந்த படத்தை பார்க்கிங் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளார். ஆக்ஷ்ன் க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் கூடிய இந்த படத்தின் பூஜைகள் இன்று 2025, மே 3ம் தேதியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் , கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பார்க்கிங் (Parking). இந்த திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) முன்னணி கதாநாயகனாக நடித்திருந்தார். மாறுபட்ட சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட்டாகியது. அதை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் உருவாக்கவுள்ள படம் STR 49. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan) முன்னணி ஆக்ஷ்ன் நாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக, டிராகன் படத்தில் நடித்துப் பிரபலமான நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரின் காமினேஷனில் இந்த படமானது மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2025, பிப்ரவரி மாதத்தில் நடிகர் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.
அதை தொடர்ந்து இந்த படத்தின் ஒரு ஒரு அப்டேட்டுகளும் வெளியாகிவந்தது. இந்நிலையில், இன்று 2025 மே 3ம் தேதியில் STR 49 படத்தின் ஷூட்டிங் பூஜைகள் எளிமையாக நடந்த முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரவலாகி வருகிறது. மேலும் படப் பூஜைகளைத் தொடர்ந்து ஷூட்டிங் எப்போது ஆரம்பமாக உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
STR 49 படக்குழு வெளியிட்ட பதிவு :
STaRting off #STR49 with a bang 🔥
All smiles and energy at this positive beginning ❤️@SilambarasanTR_ @ImRamkumar_B @iamsanthanam @AakashBaskaran @SaiAbhyankkar @11Lohar @manojdft @PraveenRaja_Off @manojmaddymm @prosathish @teamaimpr pic.twitter.com/XHU5QtZCfd
— DawnPictures (@DawnPicturesOff) May 3, 2025
இந்த படத்தின் பூஜையில் நடிகர்கள் சிலம்பரசன், சந்தானம், கயாடு லோஹர், விடிவி கணேஷ், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு – சந்தானம் கூட்டணி :
இந்த படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பின் சிம்பு மற்றும் சந்தானத்தின் கூட்டணி இணைந்துள்ளது. இவர்கள் இருவரின் காமினேஷனில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. அதைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் தனியாகப் படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் மீண்டும் சிலம்பரசனுடன் STR 49 திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.
STR 49 ஷூட்டிங் அப்டேட் ;
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கவுள்ளார். மேலும் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பூஜைகள் இன்று சிறப்பாக நடந்த நிலையில், வரும் 2025 ஜூன் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டுத் தொடங்கவுள்ளதாகவும் புதிய அத்தகவல் வெளியாகியுள்ளது.