OTT Update : குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!
Good Bad Ugly Netflix Release Update: நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தைப் பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். முற்றிலும் அஜித்தின் ரசிகர்களுக்காகச் செதுக்கப்பட்ட இந்த படமானது, தற்போது வரையிலும் ஒரு சில திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் திரையரங்குகளை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவர் வெறும் நடிகர் மட்டுமல்ல கார் ரேஸிலும் இந்தியாவின் சார்பாக பல்வேறு நாடுகளில் நடக்கும் போட்டிகளிலும் சிறப்பால் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் இவருக்குச் சமீபத்தில் இந்திய அரசு பத்ம பூஷன் (Padma Bhushan) விருதை வழங்கியுள்ளது. இவரின் கலை திறமை மற்றும் சமூக பொறுப்புணர்வுக்கு இந்த அரசு இந்த பத்ம பூஷன் விருதை வழங்கியுள்ளது. மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்த படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். முற்றிலும் மாறுபட்ட, ரசிகர்களுக்கு ஏற்ற திரைப்படமாக இந்த குட் பேட் அக்லி படமானது அமைந்திருந்தது என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை புஷ்பா படத்தைத் தயாரித்த அதே நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படமானது திரையரங்குகளை வெளியாகி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகவுள்ளது.
அஜித்தின் குட் பேட் அக்லி படமானது வரும் 2025, மே 8ம் தேதியில் பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் நிறுவனமானது வெளியிட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Avaru rules ah avare break pannitu velila varaaru na… sambhavam iruku. 8 May anniku sambhavam irukku. 🔥
Watch Good Bad Ugly on Netflix, out 8 May in Tamil, Hindi, Telugu, Kannada and Malayalam#GoodBadUglyOnNetflix pic.twitter.com/BkISFURnff— Netflix India South (@Netflix_INSouth) May 3, 2025
நடிகர் அஜித் குமாரின் இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன், அஜித்தின் ஹிட் படங்களின் ஒருங்கிணைப்பில் உருவான படமாக அமைந்திருந்தது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் நடித்திருந்தார். இவர் ஜோடி இறுதியாக விடாமுயற்சி படத்திலும் நடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் முக்கிய ரோலில் அர்ஜுன்தாஸ், பிரியா பிரகாஷ் வாரியர் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் இவர்கள் இருவரின் ஜோடியும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் இவர்கள் இருவரும் இணைந்து ஆடிய “தொட்டுத் தொட்டு பேசும்” சுல்தானா என்ற பாடலும் அருமையான வரவேற்பைப் பெற்றிருந்தது . சிலர் இந்த படம் வெற்றிபெற அந்த பாடலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறுகின்றனர்.
அதிரடி, ஆக்ஷ்ன், அஜித்தின் சினிமா ரீ-என்ட்ரி என இந்த குட் பேட் அக்லி படமானது முற்றிலும் அருமையாக அமைந்திருந்தது. மேலும் இந்த படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ. 242 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. திரையரங்குகள் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தின் இந்த குட் பேட் அக்லி படமானது வரும் 2025, மே 8ம் தேதியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.