Yogi Babu : ”நடிகராக இருக்க லாயக்கு இல்ல” யோகி பாபுவை சாடிய பிரபல தயாரிப்பாளர்!
Yogi Babu Controversy : தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது ஒரு படத்திற்கே ஹீரோவாக நடித்து வருபவர் யோகிபாபு. இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய காமெடியானகாவும், மேலும், சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் ரிலீசிற்கு தயாராகி இருக்கும் படம் கஜானா. இந்த ப்ரோமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில், அதில் கலந்துகொள்ளாத யோகி பாபுவை படத்தின் தயாரிப்பாளர் கடுமையாக சாடியுள்ளார், அதற்கு யோகிபாபு தரப்பும் விளக்கமளித்துள்ளது.

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் யோகிபாபு (Yogi Babu). இவர் தமிழில் பல்வேறு படங்களில் அங்கீகரிக்கப்படாத பாத்திரங்களில் (Unauthorized roles) நடித்து சினிமாவில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து படத்தில் 2வது நகைச்சுவை நடிகர் (Comedian), அதன் பிறகு நகைச்சுவை நடிகர் என அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்ந்துகொண்டே வந்தார். இந்நிலையில் இவர் இல்லாத முன்னணி நடிகர் படங்களே இல்லை என்றார் கூறலாம். அந்த அளவிற்கு நடிகர்கள் அஜித், விஜய் எனப் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். மேலும் படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவை கதாநாயகனாக நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில் இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் கஜானா (Gajanaa) . இந்த படத்தை இயக்குநர் பிரபாதிஷ் சாம்ஸ் (prabadish samz ) இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2025, மே 9ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத யோகிபாபுவை படத்தின் தயாரிப்பாளர் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் நிகழ்ச்சி மேடையில் யோகிபாபுவை ப்ரோமோஷன் பணிகளில் கிளந்துகொள்ளாதவர் ஒரு நடிகராக இருப்பதற்கே தகுதி இல்லை என்று கடுமையாகப் பேசியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நடிகர் யோகிபாபு தரப்பும் விளக்கம் கொடுத்துள்ளது.
கஜானா பட தயாரிப்பாளரின் கடுமையான பேச்சு :
ப்ரோமோஷன் நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் “யோகிபாபு வந்திருக்கிறாரா, இல்லை அவரு வரவில்லையா. அப்போது அவருக்கு ரூ. 7 லட்சம் சம்பளப்பாக்கி இருக்கிறது என்று அர்த்தம். ஒரு நடிகராக இருந்தால் அதுவும் அவரின் படமாக இருந்தாலும் கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் ப்ரோமோஷன் பணியில் நிச்சயம் கலந்துகொள்ளவேண்டும். ஒரு திரைப்படம் என்பது குழந்தை மாதிரி. அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு கூட இல்லை என்றால் அவர் நடிகராக இருப்பதற்கே லாயக்கு இல்லை என்றுதான் அர்த்தம்.
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரமாட்டீர்களா, இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த மாதிரியான செயலுக்குக் காலம் நிச்சயம் உங்களுக்குக் காலம் பதில் சொல்லும்” என்று கஜானா படத்தின் தயாரிப்பாளர் மேடையில் நடிகர் யோகிபாபுவை கடுமையாகச் சாடியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யோகிபாபு தரப்பு விளக்கம் :
ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் யோகிபாபு கடுமையாக விமர்சிக்கப்பட்டதை குறித்து அவரின் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. அதில் கஜானா படத்தின் ப்ரோமோஷன் மேடையில் பேசியது யார் என்றே தெரியாது. அவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் இல்லை . இந்த கஜானா படத்தில் தயாரிப்பாளர் வேறொருவர் என்று யோகிபாபுவின் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விமர்சனமானது மக்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.