Thalapathy Vijay : நியூ லுக்கில் தளபதி விஜய்.. ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் வீடியோ வைரல்!
Jana Nayagan Movie Shooting : விஜய்யின் முன்னணி நடிப்பில் இறுதியாக, மிகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ஜனநாயகன். இயக்குநர் ஹச். வினோத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படமானது, தற்போது கடைசிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் நடந்துவரும் ஷூட்டிங்கில் க்ளீன் சேவில் தளபதி விஜய்யின் புதிய தோற்றம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் தளபதியாக இருந்து வருபவர் விஜய் (Vijay). இவர் நடிகராக மட்டுமல்லாமல், தமிழகத்தில் அரசியல்வாதியாகவும் இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாகப் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை இயக்குநர் ஹச். வினோத் (H.Vinoth) இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தை கே.வி.என் ப்ரொடக்ஷ்ன் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. தளபதி விஜய்யின் கடைசி படம் என்பதால் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படமானது முற்றிலும் அரசியல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்து வருகிறார். இவர்கள் இருவரின் காமினேஷனில் ஏற்கனவே பீஸ்ட் படமானது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து ஜன நாயகன் படத்தில் இவர்கள் இருவரின் காம்போவில் உருவாகிவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், சமீப நாட்களாகக் கொடைக்கானலில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் புதிய தோற்றத்தில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. முழுவதுமாக க்ளீன் சேவில், தளபதி விஜய்யின் நியூ லுக் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இது குறித்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
ஜன நாயகன் படப்பிடிப்பில் விஜய்யின் வீடியோ :
Thalapathy @actorvijay Clean Shave For #JanaNayagan Spotted In Kodaikanal 😍 pic.twitter.com/0YYcJeJT6h
— Arun Vijay (@AVinthehousee) May 2, 2025
இயக்குநர் ஹச். வினோத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இவர் இறுதியாகத் தளபதி விஜய்யின் லியோ படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூர் ஹிட்டானது என்றே கூறலாம். இந்நிலையில் அதைத் தொடர்ந்து விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்திற்கும் பயங்கரமாக இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் சிறப்புப் பாடலை தென்னிந்தியப் பிரபல ராப்பர் ஹனுமன்கைண்ட் இந்த படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றைப் பாடவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவருடன் தமிழ் பிரபல ராப்பர் அசல் கோளாறும் இணைந்து பாடுவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. தளபதி விஜய்யின் இறுதி படம் என்பதால் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறது.
இந்த படத்தில் விஜய்யுடன் நடிகர்கள் நரேன், பிரியா மணி, பாபி தியோல், பூஜா ஹெக்டே, ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்தது வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் 2025 மே மாதத்திற்குள் முடிப்பதற்குப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் இந்த ஜன நாயகன் படமானது மிகவும் பிரம்மாண்டமாக வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. 2026ம் ஆண்டு பொங்கல் ஜன நாயகன் பொங்கலாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு இருந்து வருகின்றனர்.