Silambarasan : மணிரத்னம் மாதிரி இயக்குநர் கிடைத்திருந்தால்…. – சிலம்பரசன் நெகிழ்ச்சி
Silambarasan Praises Director Mani Ratnam : தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் படம் தக் லைப். இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடித்தது குறித்தும், மணிரத்னம் படங்களில் ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு வருவது குறித்தும் நடிகர் சிலம்பரசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகர் சிலம்பரசனை (Silambarasan) பற்றி தமிழ் சினிமாவில் தெரியாத ஆளே இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்குத் தனது சிறுவயது முதல் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவரின் நடிப்பில் பத்து தல (Pathu Thala) படத்தைத் தொடர்ந்து, மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் தக் லைப் (Thug Life). இந்த படத்தில் கதையை நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) மற்றும் மணிரத்னம் (Mani Ratnam) இணைந்து எழுதியுள்ளனர். இவர்களின் எழுத்தின் உருவான இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ளார். முற்றிலும் ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் உருவாகிவரும் இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பைத் தூண்டி வருகிறது.
இந்த படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படம் தமிழில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் சிறப்பாக வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் அதில் பேசிய நடிகர் சிலம்பரசன், இயக்குநர் மணிரத்னத்தின் படங்களுக்கு நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவது குறித்தும், அவரின் டைரக்ஷன் குறித்தும் புகழ்ந்து பேசியுள்ளார். அதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
நடிகர் சிலம்புவின் இன்ஸ்டாகிராம் பதிவு :
View this post on Instagram
மணிரத்னம் குறித்து நடிகர் சிலம்பரசன் கூறிய விஷயம் :
தக் லைப் படத்தில் ப்ரோமோஷன் மேடையில் பேசிய சிலம்பரசன், “என்னிடம் மணிரத்னம் படத்தின் ஷூட்டிங்கிற்கும் மட்டும் டைமிங்கிற்கு செல்வது ஏன் என்று கேட்கிறார்கள். அது ஏனென்றால் மணிரத்னம் சார் மீது எனக்குப் பயம் எல்லாம் கிடையாது, எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் ஏன் மணிரத்னத்தின் படத்திற்கு நேரத்திற்குச் செல்கிறேன் என்றால் “நம்ம ஒரு நடிகர், நம்மை நம்பி தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரு படத்தை எடுக்கிறார்கள், அவர்களுக்குக் கொஞ்சமாவது மரியாதை கொடுக்கவேண்டும். ஒரு படத்தில் இயக்குநர் டைமிற்கு வந்தால்தான் அந்த படத்தின் நடிகரும் சரி, பணியாளர்களும் சரி நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார்கள். மேலும் மணிரத்னம் சார் ஷூட்டிங்கிற்கு வந்தவுடன் காட்சியை அப்படி எடுக்கலாமா இல்லை இப்படி எடுக்கலாமா என்று எல்லா யோசிக்கமாட்டார்.
அவர் ஏற்கனவே அவரின் மனதில் ஒரு காட்சியை முடிவு செய்து வைத்திருப்பார். அவர் சொன்ன நேரத்திற்குப் படத்தை முடித்துவிடுவார். மணிரத்னம் சார் ஒரு நடிகரின் நேரத்தை வீணாக்கமாட்டார், அவர்கள் நடிக்கும் காட்சிகளையும் வீணாக்கமாட்டார். சொன்ன மாதிரியே சம்பளமும் சரியான நேரத்திற்கு வந்துவிடும். மேலும் அவர் சொன்ன நேரத்திற்குப் படமும் ரிலீசாகும். மணிரத்னம் மாதிரி ஒரு இயக்குநர் எனக்கு ஆரம்பத்திலே கிடைத்திருந்தால் எனது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருந்திருக்கும். நானும் அவர்களுக்குப் பல ஹிட் படங்களைக் கொடுத்திருப்பேன் என்று நடிகர் சிலம்பரசன், இயக்குநர் மணிரத்னம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.