Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

லவ் பண்ணுவியா மாட்டியா..? மாணவியை வீடு புகுந்து துரத்திய இளைஞர்.. சுவர் ஏறி தப்பித்த இளம்பெண்

Rejected Lover Attack: தமிழ்நாட்டில், காதலை ஏற்க மறுத்ததால் மூன்று மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கன்னியாகுமரியில் ஒரு இளைஞர், காதலை மறுத்த மாணவியைத் தாக்க முயன்றார், அவர் சுவர் ஏறித் தப்பினார். விருதுநகரில், காதலை மறுத்த மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவங்கள் ஒருதலைக்காதலின் ஆபத்தையும் பெண்களின் பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

லவ் பண்ணுவியா மாட்டியா..? மாணவியை வீடு புகுந்து துரத்திய இளைஞர்.. சுவர் ஏறி தப்பித்த இளம்பெண்
காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர்Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 03 May 2025 07:12 AM

தமிழ்நாடு மே 03: கன்னியாகுமரியில் (Kanyakumari) , காதலை ஏற்க மறுத்த மாணவியிடம் ஆத்திரம் அடைந்த ஜெனிஷ் என்ற இளைஞர் வீட்டிற்குள் புகுந்து தாக்க முயன்றார். அச்சமடைந்த மாணவி (Student) சுவர் ஏறி குதித்து தப்பிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் ஒருதலைபட்ச காதல் (One Side Love)  காரணமாக மாணவியின் கழுத்தை கத்தியால் அறுக்க முயன்ற சூர்யா கைது செய்யப்பட்டார். சேலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்த மோகனபிரியன், காதலை நிராகரித்த மாணவியை பேருந்து நிலையத்தில் கத்தியால் குத்தினார். பின்னர் தானும் விபரீத முடிவை எடுக்க முயன்றார். தொடர்ந்து காதல் நிமித்தமான தாக்குதல் சம்பவங்கள் அதிர்ச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன.

காதலை ஏற்க மறுத்ததால் தாக்க வந்த இளைஞர் – சுவர் ஏறி தப்பிய மாணவி

கன்னியாகுமரி மாவட்டம் மந்திவிளை பகுதியில், காதலை ஏற்க மறுத்ததற்காக மாணவியை தாக்க முயன்ற இளைஞர் ஒருவரிடம் இருந்து, அவர் சுவர் ஏறி குதித்து தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிஷ் (28) என்ற வெளிநாட்டில் பணியாற்றி வந்த இளைஞர், பக்கத்து ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவியைக் காதலித்து வந்துள்ளார்.

தனது காதலை தொலைபேசி மூலம் வெளிப்படுத்திய போது மாணவி அதனை மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெனிஷ், சொந்த ஊருக்கு வந்தும் மாணவியை வீட்டில் பின் தொடர்ந்து சென்று தாக்க முயன்றுள்ளார். அச்சமடைந்த மாணவி பக்கத்து வீட்டின் சுவரை ஏறி குதித்து தப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் மாணவியைக் கத்தியால் தாக்க முயன்ற இளைஞர் கைது

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், 2025 ஏப்ரல் 23 ஆம் தேதி காதலை ஏற்க மறுத்த மாணவியைக் கத்தியால் தாக்க முயன்ற சூர்யா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருதலைபட்சமாக காதலித்து வந்த அவர், மாணவியை வழிமறித்து காதலை ஏற்கும்படி வற்புறுத்திய போது மறுத்ததாலேயே கழுத்தை அறுக்க முயன்றுள்ளார். ஆனால் கத்தியை தவறாகப் பிடித்ததால் மாணவியின் கைகள் மட்டுமே காயமடைந்தன.

சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர்

சேலம் பழைய பேருந்து நிலையத்தில், 2025 ஏப்ரல் 16 ஆம் தேதி காதல் சிக்கலால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய மோகனபிரியன் (21) என்ற இளைஞர், பின்னர் தானும் விபரீத முடிவை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் வாயிலாக மாணவியுடன் ஏற்பட்ட உறவு, ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. ஆனால், மாணவி தனது திருமணத்திற்காக வேறு நபரை ஏற்க முடிவு செய்ததால், மாணவியிடம் திருமணம் செய்ய முடியாதென கூறியதற்காக ஆத்திரமடைந்த மோகனபிரியன் மாணவியை கத்தியால் தாக்கியுள்ளார். பயணிகள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவங்கள் அனைத்தும், ஒருதலைபட்ச காதலின் விளைவாக உருவாகும் வன்முறைகளின் அதிர்ச்சிகரமான பதிவாகும். இளைஞர்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, பெண்களின் கருத்துக்களையும் மதிக்க வேண்டிய அவசியத்தை இவை வலியுறுத்துகின்றன.

ஒருதலைபட்ச காதலின் விளைவாக உருவாகும் வன்முறை

ஒருதலைபட்ச (unrequited) காதலின் விளைவாக உருவாகும் வன்முறை என்பது சமூகத்தில் கவலையை ஏற்படுத்தும் முக்கியமான சிக்கலாகும். இது பெரும்பாலும் ஒருவர் தனது காதலை மறுப்பதைக் ஏற்க முடியாமல், எதிர் பாலினத்தினரிடம் அல்லது அருகாமையிலுள்ளவர்களிடம் எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகிறது.

  • உடல் மற்றும் உளவியல் தொந்தரவு
  • தொடர்ந்த மென்டல் ஹராஸ்மெண்ட், தொலைபேசியில் அழைப்புகள், மெசேஜ்கள், சமூக ஊடகத்தில் தாக்குதல்.
  • பின் தொடரல் (Stalking)
  • காதலை ஏற்காதவரை தொடர்ந்து பின்தொடர்தல், அந்தரங்கத்தை உடைத்தல்.
  • ஆக்ரோஷம் மற்றும் தாக்குதல்
  • காதலை ஏற்க மறுப்பவரை தாக்குதல், வன்முறை நடத்தல்.
  • விபரீத முடிவு முயற்சி அல்லது உயிரிழப்பு
  • தன்னை மிரட்டல் வைக்க விபரீத முடிவு முயற்சி அல்லது உண்மையிலேயே உயிரிழப்பது.

 

ஊக்கமருந்தில் சிக்கிய ஐபிஎல் பிரபலம்.. கிரிக்கெட்டில் இடைநீக்கம்!
ஊக்கமருந்தில் சிக்கிய ஐபிஎல் பிரபலம்.. கிரிக்கெட்டில் இடைநீக்கம்!...
ஒரே படத்தில் இந்தியன், முதல்வன், எந்திரன்.... ஷங்கரின் ஐடியா!
ஒரே படத்தில் இந்தியன், முதல்வன், எந்திரன்.... ஷங்கரின் ஐடியா!...
சூர்யாவின் ஸ்டைலில் பூஜா ஹெக்டே... ரசிகர்களைக் கவரும் வீடியோ!
சூர்யாவின் ஸ்டைலில் பூஜா ஹெக்டே... ரசிகர்களைக் கவரும் வீடியோ!...
ஜம்மு காஷ்மீர் முதல்வரை சந்தித்த PM மோடி.. பதட்டத்தில் பாகிஸ்தான்
ஜம்மு காஷ்மீர் முதல்வரை சந்தித்த PM மோடி.. பதட்டத்தில் பாகிஸ்தான்...
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள்!
குழந்தைகளின் எதிர்காலத்துக்காக 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள்!...
கோடை மழையில் நனைந்தால் உங்களை நோய்வாய்ப்படுத்துமா? உண்மை இதுதான்!
கோடை மழையில் நனைந்தால் உங்களை நோய்வாய்ப்படுத்துமா? உண்மை இதுதான்!...
நடிகர் துருவ் விக்ரமின் பைசன் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
நடிகர் துருவ் விக்ரமின் பைசன் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?...
விஜய் சேதுபதி - நித்யா மேனனின் தலைவன் தலைவி படத்தின் டீசர்!
விஜய் சேதுபதி - நித்யா மேனனின் தலைவன் தலைவி படத்தின் டீசர்!...
இனி UPI மூலம் ஸ்பீடா பணம் அனுப்பலாம் - வரவிருக்கும் புதிய அப்டேட்
இனி UPI மூலம் ஸ்பீடா பணம் அனுப்பலாம் - வரவிருக்கும் புதிய அப்டேட்...
CSK-க்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்! கலக்க காத்திருக்கும் கோலி
CSK-க்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்! கலக்க காத்திருக்கும் கோலி...
 போப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? AI படத்தால் சர்ச்சை!
 போப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? AI படத்தால் சர்ச்சை!...