விஜயை பார்க்க சென்றவருக்கு இந்த நிலையா? காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை பார்க்க சென்ற மதுரையைச் சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் மார்க்ஸ் என்று தெரியவந்துள்ளது. இவர் மதுரையில் தமிழக வெற்றிக் கழக கட்சி துண்டுடன் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரை, மே 03 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை (Tamilaga Vettri Kazhagam Vijay) பார்க்க சென்ற மதுரையைச் சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எமர்ஜென்சி என பர்மிஷன் வாங்கிக் கொண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை (TVK Vijay Madurai) பார்க்க சென்றுள்ளார். இதனை அடுத்து, கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கிற்காக நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் 2025 மே 1ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மதுரைக்கு சென்றார்.
மதுரையில் விஜயை பார்க்கச் சென்ற காவலர் சஸ்பெண்ட்
அப்போது, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், “யாரும் என்னை வாகனங்களில் பின் தொடர வேண்டாம். ஜனநாயகன் படம் வேலைக்காக கொடைக்கானல் செல்கிறேன். நான் என் வேலையைப் பார்க்க போகிறேன். நீங்களும் வீட்டிற்கு செல்லுங்கள். என்னுடைய வாகனம் பின்புறம் யாரும் பின்தொடராதீர்கள்.
பைக்கில் வேகமாக வருவது, மேலே நின்று பைக் ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் வரும் காட்சிகளை பார்க்கும்போது மனதிற்கு பதட்டமாக இருக்கிறது. விரைவில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திப்பேன்” என்று கூறியிருந்தார். ஆனாலும், விஜயின் பேச்சை கேட்காமல் மதுரை விமான நிலையம் வந்த விஜய்க்கு கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மாலையில் விமான நிலையம் வந்த விஜயை காண, காலை முதலே கட்சி தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். மதுரை விமான நிலையம் வந்த விஜயை, தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்ததோடு, வழக்கம்போல், மரங்களில் ஏறி நின்றும், வாகனங்கள் மீது ஏறிக் கூச்சலிட்டுள்ளனர்.
காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை
இதில் விஜய் சென்ற வாகனத்தின் முன்பக்கம் சேதம் அடைந்தது. இந்த நிலையில், மதுரை வந்த விஜயை பார்க்க சென்ற காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதாவது, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கதிரவன் மார்க்ஸ். இவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் காவலாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், 2025 மே 1ஆம் தேதி மதுரைக்கு விஜய் வந்திருந்த நிலையில், காவலர் கதிரவன் மார்க்ஸ் எமர்ஜென்ஸி என்று கூறி பர்மிஷன் வாங்கிக் கொண்டு, மதுரை வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார். தமிழக வெற்றிக் கழக கட்சியின் துண்டு அணிந்திருந்ததாக தெரிகிறது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இதனை அடுத்து, அவர் மீது காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.