கோயிலில் கூட்ட நெரிசல்.. சிக்கி தவித்த பக்தர்கள்.. 7 பேர் துடிதுடித்து பலி!
Goa Shirgaon Temple Stampede : கோவாவில் உள்ள லைராய் தேவி கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவா, மே 03 : கோவாவில் உள்ள ஷிர்கான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் உயிரிழந்தது (Goa Shirgaon Temple Stampede) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்க்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. யூனியன் பிரதேசமான கோவா ஷிர்கான் பகுதியில் ஸ்ரீ லைராய் தேவை கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவில் அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்ற வருகிறது.
கோயிலில் கூட்ட நெரிசில்
பார்வதி தேவியின் ஒரு வடிவமாக நம்பப்படும் லைராய் தேவியை வணங்குவதற்காக மாநிலம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருவார்கள். இந்தத் திருவிழா அதன் தனித்துவமான சடங்குகளுக்குப் பெயர் பெற்றது. அந்த வகையில், 2025 மே 2ஆம் தேதியான நேற்று ஸ்ரீ லைராய் தேவி கோயிலில் திருவிழா நடந்தது.
கோயிலில் பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கைக் காணவும், அதில் பங்கேற்கவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதாவது, ஊர்வலம் செல்ல தாயராக இருந்த நேரத்தில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. கூட்ட நெரிசலின் போது, நிலைமை மிகவும் பயங்கரமாக மாறியதாகவும், மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து வெளியேற முயன்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயம் அடைந்தனர். உடனே,அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் விரைந்தனர். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி மயக்க நிலையில் பலரும் கிடந்துள்ளனர்.
7 பேர் துடிதுடித்து பலி
Goa: A stampede during the Shirgaon Temple procession in Goa resulted in 7 deaths and 30 serious injuries. Panic spread in the crowded area, and emergency services quickly responded. Preliminary reports suggest overcrowding and lack of proper arrangements as possible causes. Goa… pic.twitter.com/gOPhcB0d5D
— IANS (@ians_india) May 3, 2025
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அதிக கூட்டம் மற்றும் சரியான ஏற்பாடுகள் இல்லாததால் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஷிர்கானில் நடந்த விபத்துக்கு கோவா காங்கிரஸ் கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ஷிர்காவ், ஸ்ரீ லைராய் தேவி ஏற்பட்ட கூட்ட நெரிசலால் கோவா காங்கிரஸ் மிகவும் வருத்தமடைந்துள்ளது. இந்த துயர சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். மேலும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.