சாப்பிடாமல் இருந்த 3 வயது குழந்தை.. பறிபோன உயிர்.. மதச் சடங்கில் நடந்த சம்பவம்!
மத்திய பிரதேசத்தில் ஜைன் சமூகத்தின் சந்தாரா மதச்சடங்கு இருந்த மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட இந்த குழந்தையை பெற்றோர்கள் சந்தாரா மதச்சடங்கு செய்ய வைத்த நிலையில், உயிரிழந்துள்ளார். சந்தாரா என்பது சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது.

மத்திய பிரதேசம், மே 03 : உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட 3 வயது சிறுமி சந்தாரா மதச்சடங்கு (சாகும் வரை உண்ணாவிரதம்) செய்து உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்தாரா மதச்சடங்கும் இதுவரை வயதானவர்கள் செய்து வரும் நிலையில், தற்போது இந்த சடங்கை 3 வயது சிறுமி செய்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரேதேச்ததில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பியூஷ் ஜெயின். இவரது மனைவி வர்ஷா. இவர்கள் இரண்டு பேரும் ஐடி ஊழியரகா பணிபுரிந்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 வயதில் வியானா ஜெயின் என்ற குழந்தை இருந்துள்ளது.
சாப்பிடாமல் இருந்த 3 வயது குழந்தை
இவர்கள் ஜைன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சிறுமிக்கு 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அவருக்கு தொடர் சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு சிறுமி வியானாவின் உடல்நிலை கொஞ்சம் தேறியது. அதன்பிறகு, மீண்டும் சிறுமியின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது.
இதனால், அவர்களது பெற்றோர்கள் சமண குரு ராஜேஷ் முனியிடம் அழைத்து சென்றதாக தெரிகிறது. அவர்கள் சிறுமி உயிரிழக்க போவது உறுதி என்று கூறியதாக தெரிகிறது. இதனால், அந்த சமண குருவும் சிறுமியை சாந்தாரா செய்ய பரிந்துரைத்ததாக தெரிகிறது. இதனை கேட்ட பெற்றோர், சாந்தாரா சடங்கிற்கு ஒப்புக் கொண்டது தெரிகிறது.
அந்த சடங்குகிறகு பிறகு, 2025 மார்ச் 21ஆம் தேதி சிறுமி வியான உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் வர்ஷா கூறுகையில், “மந்திரங்களுடன் நடத்தப்பட்ட இந்த சடங்கு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. அதன்பிறகு, வியானா அமைதியாக காலமானார். நான் தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் செல்கிறேன்.
மதச் சடங்கில் நடந்த சம்பவம்
அவளுக்கு பசுக்களுக்கும் புறாக்களுக்கும் உணவளிப்பது மிகவும் பிடிக்கும், நாங்கள் அதைத் தொடர்கிறோம். எதிர்காலத்தில் அவளுடைய நினைவாக ஒரு பெரிய மரக்கன்று நடுவது என் கனவு” என்று கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் இருக்கும் ஜைன் சமூகத்தினர் சந்தாரா என்ற மதச்சடங்கை பின்பற்றுகிறார்கள். சந்தாரா சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது.
இந்த மதச்சடங்கை பெரும்பாலும் முதியவர்க்ள, இறக்கும் நிலையில் இருப்பவர்கள், நோய் வாய்ப்பட்டோர் தங்கள் இறுதி காலத்தை கழிக்க இந்த சடங்கை பின்பற்றுகிறார்கள். சந்தாரா மதச்சடங்கை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 2015ஆம் ஆண்டில் சட்டவிரோதமானது எனக் கூறி ரத்து செய்தது. இந்த நடைமுறை ஜைன் மதத்திற்கு அவசியமில்லை என்று தீர்ப்பளித்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் சிறிது நேரத்திலேயே அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. இதன் மூலம், நாட்டில் சந்தாரா மதச் சடங்கு சட்டப்பூர்வமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.