Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: அடாவடி காட்ட காத்திருக்கும் மழை.. சென்னை vs பெங்களூரு போட்டி நடைபெறுமா..? வெதர் ரிப்போர்ட் இதோ!

RCB vs CSK Match 52 Preview: ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் தகுதி இழந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் மோதுகிறது. பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. சின்னசாமி ஸ்டேடியத்தின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச் மற்றும் வானிலை முன்னறிவிப்பு, ஹெட்-டு-ஹெட் விவரங்கள், இரு அணிகளின் பிளேயிங் லெவன் ஆகியவை இந்தப் பதிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

IPL 2025: அடாவடி காட்ட காத்திருக்கும் மழை.. சென்னை vs பெங்களூரு போட்டி நடைபெறுமா..? வெதர் ரிப்போர்ட் இதோ!
எம்.எஸ்.தோனி - விராட் கோலிImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 03 May 2025 12:52 PM

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறியது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியுடன் மோதுகிறது. இந்த 52வது போட்டியானது இன்று அதாவது 2025 மே 3ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. அதேநேரத்தில், பிளே ஆஃப் சுற்றுகளை கருத்தில் கொண்டு இந்த போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிகவும் முக்கியமானது. ஐபிஎல் 2025 சீசனில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அந்தவகையில், இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட், ஹெட் டூ ஹெட் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 3 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

பிட்ச் எப்படி..?

எம். சின்னசாமி ஸ்டேடியத்தின் பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. அதாவது ரன் மழை பொழியும். இன்றைய போட்டியிலும் அதிக ரன்களை எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில், இங்குள்ள பிட்ச் சில நேரங்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவியை தரும். சென்னை அணியில் மூன்று சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் அவர்கள் பெங்களூரு அணிக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். இருப்பினும், பெங்களூரு அணியில் சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடக்கூடிய நல்ல பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

ஐபிஎல் வரலாற்றில் எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை 99 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 42 போட்டிகளிலும், 2வதாக பேட்டிங் செய்த அணி 53 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல்லில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் 34 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி அதிகபட்சமாக 21 போட்டிகளிலும், பெங்களூரு அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. ஐபிஎல் 2025 இன் 8வது போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வானிலை எப்படி..?

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று அதாவது 2025 மே 3ம் தேதி மதியம் பெங்களூருவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாலையிலும் மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். அக்யூவெதரின் கூற்றுப்படி, இரவில் மழை பெய்ய 43 சதவீத வாய்ப்பும், இடியுடன் கூடிய மழை பெய்ய 26 சதவீத வாய்ப்பும் உள்ளது. மழை இந்தப் போட்டியை கெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதர் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருணால் பாண்ட்யா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தீபக் ஹூடா, மகேந்திர சிங் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), நூர் அகமது, கலீல் அகமது, மதிஷா பதிரனா.

பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
பைக்கில் எழுந்து நின்று சாகசம்.. நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!...
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!...
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!
உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? ஈஸியா மாற்றலாம்!...
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 - தேர்வில் 97% பெற்ற மாணவி!...
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?
ஆன்லைனில் ஆதார் முகவரி மாற்றம் செய்வது எப்படி?...
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு
தடுப்பூசி போட சிறந்த இடம் எது? இடது அல்லது வலது கை? புதிய ஆய்வு...
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?
மே மாதத்தில் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் என்னென்ன?...
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!
மொபைல் போனில் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க இவற்றை பின்பற்றுங்கள்!...
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
கல்வி நிலையங்களில் மூடநம்பிக்கை கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்...
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!
மணமகனின் தலையில் தேங்காய் உடைக்கும் வித்தியாசமான சடங்கு!...
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!
உதடுகள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க!...