Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Rameswaram: நூற்றாண்டு கண்ட பாம்பன் ரயில்வே பாலம்.. பிரியாவிடை கொடுக்கும் மக்கள்!

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் பாலம் நூற்றாண்டு கண்டதாகும். மரப்பாலம் முதல் இரும்புப்பாலம் வரையிலான வளர்ச்சி இன்றைக்கும் பொறியியல் துறையின் அசாத்தியமான உழைப்பாகும். 2025 ராமநவமி அன்று புதிய ரயில்வே பாலம் திறக்கப்பட உள்ளது.

Rameswaram: நூற்றாண்டு கண்ட பாம்பன் ரயில்வே பாலம்.. பிரியாவிடை கொடுக்கும் மக்கள்!
பழைய பாம்பன் ரயில் பாலம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 02 Apr 2025 05:53 AM

ராமேஸ்வரம் (Rameswaram) என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பாம்பன் பாலம் (Pamban Railway Bridge) தான். ராமநாதபுரம் என்ற ஊரையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் அந்த பிரமாண்ட சாலை வழி பாலத்தைப் பார்த்தால் இப்போதும் நமக்கு பிரமிப்பு தான் ஏற்படும். அந்த பாலத்தில் நின்று அருகில் கடலினுள் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலத்தில் ரயில் செல்வதைப் பார்க்க கண்கோடி வேண்டும் என சொல்வார்கள். தமிழ்நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் கடலின் அழகைக் காண ராமேஸ்வரம் சிறந்த இடமாகும். இப்படியான ராமேஸ்வரத்தில் உள்ள பழைய ரயில்வே தண்டவாளத்திற்கு பதிலாக புதிய அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை 2025, ஏப்ரல் 6 ஆம் தேதி ராமநவமி அன்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) திறந்து வைக்க உள்ளார். இப்படியான ராமேஸ்வரத்தில் ரயில்வே பாலம் உருவான வரலாறு பற்றிக் காணலாம்.

ராமேஸ்வரம் ரயில் பாலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் ராமேஸ்வரம் தீவு எப்படி உருவானது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கி.பி.1480 ஆம் ஆண்டு மிகக் கொடிய புயல் ஒன்று உருவானது. அப்போதெல்லாம் மண்டபத்துக்கும் பாம்பனுக்கும் இடையில் குதிரை தாண்டும் தூரத்தில் பாம்பன் கால்வாய் அமைந்திருந்தது. அந்தப் புயல் காரணமாக பாம்பன் கால்வாய் பெரிதாக விரிய தொடங்கியது. தொடர்ச்சியாக புயல்கள் ஏற்பட்டதன் காரணமாக ராமேஸ்வரம் என்ற தனித்தீவு உருவானதாக 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரப்பாலம் தொடங்கி இரும்புப்பாலம் வரை

கி.பி.1639 ஆம்ஆண்டு திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தளபதியாக இருந்த இராமபையன் மற்றும் தளவாய் சேதுபதி ஆகியோர் இடையே போர் நடந்தது. அப்போது பாம்பனில் சென்று தளவாய் சேதுபதி ஒளிந்து கொண்ட நிலையில் அவரைப் பிடிக்க மண்டபம் மற்றும் பாம்பன் தீவுகளுக்கு இடையே மரத்தினால் ஆன பாலம் கட்டி தளபதி இராமபையன் சென்று தளவாய் சேதுபதியை கைது செய்தார். அப்படிதான் மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் முதல் பாலம் கட்டப்பட்டது.

இதன் பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் ரூ.2.60 கோடி செலவில் தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலும் கடலில் ரயில் பாலம் கட்ட ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிய நிலையில் அது கைவிடப்பட்டது. இதன் பின்னர் கி.பி.1837 இல் குருசடை தீவிலிருந்து பாம்பனுக்கு அருகே கடலில் ஒரு சிறிய கால்வாய் வெட்டி அதன் வழியாக சிறிய ரக கப்பல்கள் செல்வதற்கு இங்கிலாந்து பொறியியல் நிபுணர்கள் வழி வகுத்தனர்.

கம்பீரமாக கட்டப்பட்ட பாம்பன் ரயில் பாலம்

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே கீழே கப்பலும் மேலே ரயில் செல்லும் வகையில் ஒரு பாலம் கட்ட வேண்டும் என்றும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையில் இருக்கும் தலைமன்னாருக்கும் இடையே சிறு கப்பல் போக்குவரத்து நடத்தவும் முடிவு செய்யப்பட்டது அப்போதைய ஆங்கிலேய அரசு ஒப்புதல் அளித்த நிலையில் 1911 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேலை தொடங்கி 1913 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்தது.

சுமார் 40 அடி நீளம் உள்ள பாம்பன் பாலத்தில் 145 தூண்கள் இடம்பெற்று இருந்தது. மொத்தம் 2.3 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் தான் பழைய பாலமாகும். சுமார் 4000 டன் சிமெண்ட், 1.36 லட்சம் கன சதுர அடி களிமண், 1,800 கன சதுர அடி மணல் மற்றும் 80,000 கன சதுர அடி அளவு கொண்ட பாறைகள் , 2600 டன் கொண்ட இரும்பு ஆகியவை ரயில்வே பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டது.  ரயில்வே பாலத்தின் அடியில் கப்பல் செல்வதற்கு வழிவிடும் தூக்கு பாலம் சுமார் 214 அடி நீளம் கொண்டது.

நூற்றாண்டு கண்ட பாலம்

இந்த பாலத்தில் முதல் முறையாக 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரயில் இயக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் அமைந்துள்ள தேயிலைத் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் அழைத்து செல்வதற்காக பாலம் பயன்படுத்தப்பட்ட நிலையில் அதன் பயணம் விவரம் பின்வருமாறு எழுந்தது. அதாவது சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயிலில் பயணம் செய்து பின்னர் அங்கிருந்து சிறு கப்பல் மூலம் தலைமன்னாருக்கு பயணிகள் செல்ல வேண்டும்.

பின்னர் கொழும்பு செல்ல ரயில் சேவை உருவாக்கப்பட்டிருந்தது . இதனை போட் மெயில் சேவை என அழைத்தனர். 1964ஆம் ஆண்டு தனுஷ்கோடியை மிகப்பெரிய புயல் தாக்கியதில் இந்த பாலம் சேதம் அடைந்தது. சுமார் 45 நாட்கள் பராமரிப்புக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் 2007 முதல் அகல ரயில் பாதைக்காக குறுகிய தண்டவாளங்கள் அனைத்தும் மாற்றப்பட்டது.

சுமார் நூறாண்டுகள் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி நிறைவுற்றதை சிறப்பிக்கும் வகையில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இப்படி நூற்றாண்டு பாரம்பரியம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை கொண்ட பாம்பன் ரயில் பாலம் தனது சேவையை ஏற்கனவே நிறுத்திவிட்டது. அதற்கு முழு நேர பிரியாவிடை கொடுக்கும் நேரமும் வந்துவிட்டது என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.

மேடையில் மயங்கி விழுந்த விஷால் - அவருக்கு என்ன ஆச்சு?
மேடையில் மயங்கி விழுந்த விஷால் - அவருக்கு என்ன ஆச்சு?...
கில்..? பண்ட்..? இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்..?
கில்..? பண்ட்..? இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார்..?...
வெளிநாட்டுக்கு டூர் போகணுமா? விசா இல்லாமல் பயணிக்க கூடிய நாடுகள்
வெளிநாட்டுக்கு டூர் போகணுமா? விசா இல்லாமல் பயணிக்க கூடிய நாடுகள்...
இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!
இனி காமெடியனாக படத்தில் நடிப்பேனா? நடிகர் சூரி கொடுத்த விளக்கம்!...
வன்னியர் இளைஞர் பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!
வன்னியர் இளைஞர் பெருவிழாவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்கள்!...
மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் யானைகளின் வீடியோ!
மழையில் நனையும் பாகனை பாதுகாக்கும் யானைகளின் வீடியோ!...
ஆபத்தான முறையில் ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்!
ஆபத்தான முறையில் ரயிலில் தொங்கிக்கொண்டு சென்ற இளம் பெண்!...
கருணாநிதிக்கு மெரினாவில் ராமதாஸால் இடம் கிடைத்தது - பாமக பாலு
கருணாநிதிக்கு மெரினாவில் ராமதாஸால் இடம் கிடைத்தது - பாமக பாலு...
சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை... அதற்கான காரணம் இதுதான்- ஜோதிகா!
சூர்யாவுடன் சண்டை போடுவதில்லை... அதற்கான காரணம் இதுதான்- ஜோதிகா!...
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..வெற்றியாளர் விவரம்
நியூஸ்9 கார்ப்பரேட் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்..வெற்றியாளர் விவரம்...
AI உதவியுடன் தனது பெயரைத் தேர்ந்தெடுத்த புதிய போப்
AI உதவியுடன் தனது பெயரைத் தேர்ந்தெடுத்த புதிய போப்...