சென்னை அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரியும் தீ!
Goods Train Met With an Accident | சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் ஒன்று பயங்கர தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த ரயில் துறைமுகத்தில் இருந்து எண்ணெய் பொருட்களை ஏற்றி சென்ற நிலையில், திடீரென தடம் புரண்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
சென்னை, ஜூலை 13 : சென்னை திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து (Goods Train Fire Accident) ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் திடீரென தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரயில் தீ விபத்து காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. விபத்துக்குள்ளான சரக்கு ரயிலில் எரிபொருட்கள் இருக்கும் நிலையில், மேலும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சரக்கு ரயில் தீ விபத்தில் சிக்கிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை அருகே தீ விபத்தில் சிக்கிய சரக்கு ரயில்
தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கும், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு பொருட்கள் ஏற்றுமதி செய்ய, ரயில்கள் மற்றும் கப்பல்கள் முதன்மை ஆதாரமாக உள்ளன. அந்த வகையில் சென்னையில் இருந்து எரிபொருள் ஏற்றி சென்ற சரக்கு ரயில் ஒன்று விபத்தில் சிக்கிய நிலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூர் அருகே துறைமுகத்திலிருந்து எரிபொருட்களை ஏற்றி சென்ற அந்த ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் ரயிலில் தீப்பிடித்து எரிய தொடங்கிய நிலையில், ரயிலில் எரி பொருட்கள் இருப்பதால் மேலும் தீ பரவி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யும் தீயணைப்பு துறையினர்
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயிலில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். தீயை அணைப்பதற்கான பணி இன்னும் முடிவடையாத நிலையில், அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்
தீ மிக வேகமாக கொழுந்துவிட்டு எரிவதால் வேடிக்கை பார்க்க பொதுமக்கள் யாரும் அங்கு வர வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறுவுரை வழங்கியுள்ளனர். இந்த நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.