Actor Srikanth Arrested: போதைப்பொருள் பயன்பாடு! சிக்கிய ஆதாரம்.. நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி..?

Drug Abduction Case: சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த மோதலில் தொடங்கிய வழக்கில், நடிகர் ஸ்ரீகாந்த் 40 முறை கோகேன் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. பிரதீப் மற்றும் ஜான் ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீகாந்தின் போதைப்பொருள் பயன்பாடு உறுதி செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். 12,000 ரூபாய் ஒரு கிராமுக்கு என 4.72 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோகேன் வாங்கியதாக கூறப்படுகிறது.

Actor Srikanth Arrested: போதைப்பொருள் பயன்பாடு! சிக்கிய ஆதாரம்.. நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி..?

நடிகர் ஸ்ரீகாந்த்

Published: 

23 Jun 2025 17:37 PM

சென்னை, ஜூன் 23: தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சென்னையில் சில தெருவோரங்களில் இருந்து உயர்தர பார்கள் வரை இவை அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. இந்தநிலையில், சென்னை நுங்கம்பாகத்தில் (Nungambakkam Police Station) உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட மோதலில் முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் செல்போன்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், இவருக்கு கோகேன் போதைப்பொருள் (Drug Abduction Case) கடத்தல் நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு பிரசாத்தின் நண்பரான பிரதீப் குமாரையும், மேற்கு ஆப்ரிக்காவின் கானா நாட்டை சேர்ந்த ஜான் என்பவரை கைது செய்தனர். இதை தொடர்ந்து, இந்த வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் 40 முறை போதைப்பொருள் வாங்கியது தெரியவந்துள்ளது.

போதைப் பொருள் வழக்கில் 3வது குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த் சேர்ப்பு:

போதைப் பொருள் வழக்கில் 3வது குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக பிரதீப் குமாரும் ‌, 2வது குற்றவாளியாக கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 3வது குற்றவாளியாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி..?

கடந்த 2025 ஜூன் 17ம் தேதி நுங்கம்பாக்கம் அருகே மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் பிரதீப் சில தினங்களுக்கு முன்பு, சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த சண்டை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார், இதை தொடர்ந்து, இவரது செல் போனை பறிமுதல் செய்த காவல்துறையினர், வாட்ஸ் ஆப் செயலியை சோதனை செய்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பிரதீப்பை கைது செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்யும் போது பிரதீப்புக்கும், நடிகர் ஸ்ரீகாந்திற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் பிரதீப்பிடம் இருந்து போதைப்பொருள் வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று அதாவது 2025 ஜூன் 23ம் தேதி காலை 8 மணியளவில் நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள F 3 காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த் போதை பொருள் பயன்படுத்தி உள்ளாரா என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள சென்னை மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் உள்ள மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ஆய்வு முடிவுகளில் ஶ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் பிரதீப்பிடம் போதை பொருளை கிராம் ஒன்றுக்கு 12,000 என்ற அடிப்படையில், 40 முறை போதை பொருள் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மொத்தமாக கிராமிற்கு ரூ.12,000 வீதம் ரூ. 4.72 லட்சத்திற்கு போதைப்பொருள் வாங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.