AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அரிய நோயால் போராடும் 8 மாதக் குழந்தை.. உதவ முன்வந்த முதல்வர் விஜய்.. கோவை ரோடு ஷோவில் நடந்த உருக்கமான சந்திப்பு!!

CM Vijay Coimbatore Visit: கோவையில் ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் விஜயிடம், அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 8 மாதக் குழந்தையின் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்தனர். குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான ரூ.16 கோடி நிதியுதவியை அரசே ஏற்றுப் பார்த்துக்கொள்வதாக முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.

அரிய நோயால் போராடும் 8 மாதக் குழந்தை.. உதவ முன்வந்த முதல்வர் விஜய்.. கோவை ரோடு ஷோவில் நடந்த உருக்கமான சந்திப்பு!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 17 Oct 2026 07:06 AM IST

கோவை, அக்.17: தமிழ்நாட்டின் முக்கிய வணிக நகரமான கோவையில், பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளையும் கல்வி மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு சுமார் 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் விஜய் நேற்று கோவைக்கு சென்றிருந்தார். அப்போது, அங்கு நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரின் இதயங்களையும் உலுக்கியுள்ளது. கோவை விமான நிலையம் வந்திறங்கிய முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் பொதுமக்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். அந்தப் பிரம்மாண்டமான வரவேற்பு ஊர்வலத்தின் நடுவே, அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டு மரணத்துடன் போராடும் தனது 8 மாதக் குழந்தையைக் காப்பாற்றுமாறு கோரி பெற்றோர் ஏந்தியிருந்த பதாகையைக் கவனித்த முதலமைச்சர், உடனடியாகத் தனது பாதுகாப்புக் காவலர்களை அனுப்பி விவரம் விசாரித்ததோடு, அக்குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான முழு உதவியையும் தாம் வழங்குவதாக அளித்த உறுதி தற்போது மாபெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: தயாராக இருந்த ஹெலிகாப்டர்.. கேரள செல்லவிருந்த முதல்வர் விஜய்.. பயணம் திடீர் ரத்து… பின்னணி என்ன!

அரிய மரபணு நோயும் ரூ.16 கோடி சிகிச்சை செலவும்:

பொள்ளாச்சி அருகில் உள்ள புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 8 மாதக் பெண் குழந்தையான ஆருத்ரா, ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி (Spinal Muscular Atrophy – SMA) எனப்படும் கடுமையான மற்றும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முதுகெலும்பு தசை சிதைவை ஏற்படுத்தக்கூடிய இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு ‘Zolgensma’ என்ற அதிநவீன மரபணு சிகிச்சை (Gene Therapy) செய்யப்பட வேண்டும். இந்த சிகிச்சைக்கு உலக அளவில் இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் வரை செலவாகும் எனக் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களது வாழ்நாளில் எவவளவ முயன்றாலும் இவ்வளவு பெருந்தொகையைத் திரட்ட முடியாத இயலாமை நிலையில், தங்களது கைக்க்குழந்தையைக் காப்பாற்றிக்கொள்ளக் கடைசி முயற்சியாக முதலமைச்சரை நேரில் சந்தித்து உதவி கோர முடிவு செய்துள்ளனர்.

விமான நிலைய சாலையில் நெகிழ்ச்சி சம்பவம்:

முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்காகக் கோவை விமான நிலையம் முதல் விழா மேடை வரை செல்லும் பாதையில், ‘Help for Aaruthra’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையுடன் பெற்றோரும் உறவினர்களும் காத்திருந்தனர். திறந்த வாகனத்தில் பொதுமக்களைப் பார்த்துப் புன்னகையுடன் கையசைத்துக்கொண்டே வந்த முதலமைச்சரின் பார்வை அந்தப் பதாகையின் மீது பட்டது. உடனடியாகத் தனது வாகனத்தை சற்று மெதுவாக்கக் கூறியதுடன், பாதுகாப்பு அதிகாரிகளை அனுப்பி அந்தப் பதாகையை ஏந்தியிருந்தவர்களிடம் விசாரித்துத் தன்னிடம அழைத்து வருமாறு உத்தரவிட்டுள்ளார். குழந்தையின் தாய் பிரியங்காவிடம் குழந்தையின் உடல்நிலை குறித்தும், சிகிச்சைக்குத் தேவைப்படும் பெருந்தொகை குறித்தும் முதலமைச்சர் விரிவாகக் கேட்டறிந்துள்ளார்.

இதையும் படிக்க: ஒரே லாட்டரி நிறுவனம்.. திமுக- அதிமுக பெற்ற ரூ. 260 கோடி நன்கொடை.. அதிரவைக்கும் பின்னணி!

பெற்றோருக்கு நம்பிக்கையளித்த முதலமைச்சர்:

கண்ணீருடன் தங்களது குழந்தையின் நிலையை எடுத்துரைத்த பெற்றோரிடம் கனிவோடு பேசிய முதலமைச்சர் விஜய், “கவலைப்பட வேண்டாம், குழந்தையைக் காப்பாற்றுவதற்கான மருத்துவச் செலவுகள் மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று உறுதியளித்துள்ளார். முதலமைச்சரின் இந்த மனிதநேயமிக்க உடனடி வாக்குறுதி அக்குழந்தையின் குடும்பத்தினருக்குப் புதிய வாழ்வையும் பெருமிதத்தையும் அளித்துள்ளது. ஒருபுறம் அரசுப் பணிகள் மற்றும் அரசியல் பயணங்கள் தீவிரமாக நடைபெற்றாலும், மற்றொருபுறம் பொதுமக்களின் துயரங்களை உடனடியாகத் தீர்த்து வைக்கும் முதலமைச்சரின் இந்தச் செயல் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.

Follow Us