Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுட்டெரிக்கும் சூரியன்.. 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில், அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், ஜூலை 9, 2025 தேதியான இன்று சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சுட்டெரிக்கும் சூரியன்.. 12 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Jul 2025 19:35 PM

வானிலை நிலவரம், ஜூலை 9, 2025: தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது பதிவாகி வருகிறது. ஜூலை 8 2025 ஆம் தேதி ஆன நேற்று இந்தியாவிலேயே அதிகபட்சமாக மதுரையில் தான் வெப்பநிலை பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 8 2025 தேதி ஆன நேற்று மதுரையில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து ஜூலை 9, 2025 தேதியான இன்றும் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 39.1 டிகிரி செல்சியஸும், தூத்துக்குடியில் 39 டிகிரி செல்சியஸும், நாகப்பட்டினத்தில் 39 டிகிரி செல்சியஸும், கடலூரில் 38.4 டிகிரி செல்சியஸும், திருச்சிராப்பள்ளியில் 38.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

சென்னையில் 100 டிகிரி கடந்து பதிவான வெப்பநிலை:

சென்னை பொறுத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.7 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 38.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் கடுமையான வெப்பநிலையால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் குறைந்த நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனேக மாவட்டங்களில் வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

லேசான மழைக்கு வாய்ப்பு:


இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஜூலை 9, 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம் அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: சென்னையில் ACE Pro அறிமுகம்: எலக்டிரிக், பெட்ரோல், எல்பிஜி என 3 புதிய மாடல்கள் வெளியீடு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில், அதிகபட்ச வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், ஜூலை 9, 2025 தேதியான இன்று சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 39.7 டிகிரி செல்சியஸ் கிட்டத்தட்ட 40 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வெப்ப சலனம் காரணமாக மழை இருக்கும் – பிரதீப் ஜான்:

அதிகப்படியான வெப்பநிலை இருக்கும் காரணத்தால் வெப்ப சலனம் ஏற்பட்டு மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை வளர்ப்பது ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜூலை 9, 2025 தேதியான இன்று 12 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.