தமிழ்நாடு வானிலை நிலவரம்.. 12 மாவட்டங்களில் 100 டிகிரி கடந்த வெப்பம். அடுத்து என்ன?
Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வெப்ப சலனம் காரணமாக மழை பதிவாகக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் பகல் நேரங்களில் வெப்பநிலை என்பது 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஜூலை 9, 2025; சென்னையில் ஜூலை 8 2025 தேதியான நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் அனேக பகுதிகளில் பரவலான மழை பதிவானது. பகல் நேரங்களில் வெப்பநிலையின் தாக்கம் கடுமையாக இருந்ததன் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு இந்த மழையானது பதிவாகியுள்ளது. சென்னையில் இருக்கக்கூடிய கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, பட்டினப்பாக்கம், ராமாபுரம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், மீனம்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு வரை லேசான முதல் மிதமான மழை பதிவானது. இதனால் பூமியின் உஷ்ணம் தணிந்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடந்த சில நாட்களாக 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மழைக்கு வாய்ப்பு உள்ளதா?
இது பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஜூலை 9 2025 தேதியான இன்று ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலை வரும் ஜூலை 14 2025 ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலையை பொருத்தவரையில் ஒரு சில பகுதிகளில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகரித்து பதிவாக கூடும் எனவும் இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்பாடு கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களில் சதமடித்த வெயில்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் 39.2 டிகிரி செல்சியஸும், நாகப்பட்டினத்தில் 38.8 டிகிரி செல்சியஸும், வேலூரில் 38.7 டிகிரி செல்சியஸும், திருச்சியில் 38.1 டிகிரி செல்சியஸும், ஈரோட்டில் 38.6 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. சென்னையை பொருத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 39.3 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 39.2 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வெப்ப சலனம் காரணமாக மழை இருக்கும் – பிரதீப் ஜான்:
Sudden showers possible in Chennai today
——————-
Sizzling day in Chennai due to strong offshore winds not allowing the sea breeze to move into the city. Yesterday night at 8 pm the Temp was 35 C shows there was no sea breeze movement into the city.Today the Sea… pic.twitter.com/qvlTDPeMVf
— Tamil Nadu Weatherman (@praddy06) July 8, 2025
சென்னை பொறுத்தவரையில் வரும் நாட்களில் வெப்பநிலையின் தாக்கம் என்பது ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வரை குறைந்த பதிவாக கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பதிவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.