மருத்துவமனையல் சிகிச்சை பெறும் ராமதாஸ் – நேரில் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி
Edappadi K Palaniswami : பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

எடப்பாடி கே பழனிசாமி
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் (Ramadoss) உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீரான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ராமதாஸிடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தன்னிடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமியை தன் அருகில் அமர வைத்து ராமதாஸ் பேசினார். அப்போது அவர் இன்னும் ஒரு சில தினங்களில் வீடு திரும்பிவிடுவேன் எனவும் பேசினார்.
இதையும் படிக்க : மருத்துவமனையில் ராமதாஸ் அட்மிட்.. பதறி ஓடிய அன்புமணி.. நலம் விசாரிப்பு!
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தார். அதற்கான தேதிகள் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலம் பெற வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே நிலவும் பனிப்போர்
பாமகவில் ராமதாஸிற்கும் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக கட்சியின் தலைவர் யார் என்பதில் கடும்போட்டி நிலவி வருகிறது. கட்சியின் இருவரும் தனிச்சையான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இருவரும் தனித்தனியாக நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர். இந்த நலையில் தன் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவியை அன்புமணி ராமதாஸ் வைத்திருந்ததாக ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அவர் வீட்டில் இருந்து ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : பாமக நிறுவனர் ராமதாஸ் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி – என்ன நடந்தது?
சமீபத்தில் பாமகவின் இளைஞரணி செயலாளராக பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை ராமதாஸ் நியமித்தார். பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தில் தமிழ்க்குமரன் இணைத் தயாரிப்பாளராகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.