Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

MS Dhoni’s Brother: என்னது! எம்.எஸ்.தோனிக்கு அண்ணன் இருக்கிறாரா..? முழு பூசணியை மறைத்த கதை!

Meet Narendra Singh Dhoni: இந்தக் கட்டுரை எம்.எஸ். தோனியின் மூத்த சகோதரர் நரேந்திர சிங் தோனியின் வாழ்க்கையைப் பற்றியது. அரசியலில் ஈடுபட்டுள்ள நரேந்திர சிங், தனது தம்பியை விட வேறுபட்ட வாழ்க்கை வாழ்கிறார். இவர்களின் குடும்ப உறவு, நரேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் அனுபவங்கள், மற்றும் அரசியல் வாழ்க்கை ஆகியவற்றை இந்தக் கட்டுரை விளக்குகிறது. எம்.எஸ். தோனி படத்தில் இவர் இல்லாததற்கான காரணமும் விளக்கப்பட்டுள்ளது.

MS Dhoni’s Brother: என்னது! எம்.எஸ்.தோனிக்கு அண்ணன் இருக்கிறாரா..? முழு பூசணியை மறைத்த கதை!
எம்.எஸ்.தோனியின் அண்ணன் நரேந்திர சிங் தோனிImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 30 Apr 2025 20:16 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) வாழ்க்கை வரலாறு பலருக்கும் தெரியும். இவ்வளவு ஏன் தோனியின் சிறு வயது வாழ்க்கை முதல் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்றது வரை நாம் தோனி அன்டோல்ட் ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story) படத்தில் முழுமையாக பார்த்திருப்போம். இருப்பினும், புகழ்பெற்ற மகேந்திர சிங் தோனிக்கு, நரேந்திர சிங் தோனி என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார் என்றால் உங்களுக்கு தெரியுமா..? ஆம்! இது கற்பனை இல்லை.. உண்மையில் மகேந்திர சிங் தோனிக்கு, நரேந்திர சிங் தோனி என்ற அண்ணன் ஒருவர் உள்ளார். அவரை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

எம்.எஸ்.தோனி:

இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கி மகேந்திர சிங் தோனி 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்துள்ளார். 2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமான எம்.எஸ்.தோனி, தனது தொடக்க காலத்தில் பந்தை மூர்க்கத்தனமாக அடிப்பவராக இருந்தார். இதன் காரணமாகவே, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை விரைவாக பெற்றார். காலப்போக்கில் தனது ஆக்ரோஷத்தை குறைத்து, இந்திய அணிக்கு வெற்றி தர வேண்டும் என்று பினிஷராக தன்னை மாற்றி கொண்டார்.

2016ம் ஆண்டு நீரஜ் பாண்டே இயக்கிய எம்.எஸ்.தோனி The Untold Story படத்தில் மகேந்திர சிங் தோனியின் வெற்றிக்கதை படமாக்கப்பட்டது. இதில், தோனியின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த அவரது சகோதரி, பெற்றோர் மற்றும் மனைவி சாக்‌ஷி என குடும்ப உறுப்பினர்களும், அவரது பயிற்சியாளர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என முக்கியமானவர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இருப்பினும், எம்.எஸ்.தோனியின் மூத்த சகோதரரான நரேந்திர சிங் தோனி ஏன் இடம் பெறவில்லை என்ற காரணம் கிடைத்துள்ளது.

நரேந்திர சிங் தோனி:

எம்.எஸ்.தோனியின் மூத்த சகோதரரான நரேந்திர சிங் தோனி, அவரை விட 10 வயது மூத்தவர் என்று கூறப்படுகிறது. எம்.எஸ்.தோனி எப்படி தீவிர கிரிக்கெட்டில் ஈடுபட்டு இருந்தாரோ, அதேபோல் நரேந்திர சிங் தோனி அரசியல்வாதி என்று கூறப்படுகிறது. நரேந்திர சிங் தோனி கடந்த 2013ம் ஆண்டு முதல் சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகியாக உள்ளார். இதற்கு முன்பு, இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி நரேந்திர சிங் தோனி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எம்.எஸ்.தோனியை போன்று இவரும் ராஞ்சியில் வசித்து வந்தாலும், அவ்வபோது உத்தரகண்டில் உள்ள தனது சொந்த கிராமத்திலும் நேரத்தை செலவு செய்து வருகிறார். என்னதான் தனது தம்பி எம்.எஸ்.தோனி மிகவும் பிரபலம் என்றாலும், நரேந்திர சிங் தோனி எளிமையான மற்ற்றும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறது. இதன் காரணமாக, இவரது வணிகம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து எதுவும் தெரியவில்லை.

நரேந்திர சிங் தோனி தனது தம்பியான மகேந்திர சிங் தோனியுடன் ஆரம்பகாலத்தில் வலுவான பிணைப்பை கொண்டிருந்தாலும், குடும்பத் தகராறு காரணமாக இவர்கள் இருவரும் நீண்டகாலமாக பேசிகொள்ளவில்லை என்று சில தகவல்கள் கூறப்படுகிறது. நரேந்திர சிங் தோனியும் தனது பள்ளி பருவத்தில் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். மேலும், பல்வேறு போட்டிகளில் தேசிய அளவில் தனது பள்ளிக்காக விளையாடியுள்ளார் என்று கூறப்படுகிறது.

எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நரேந்திர சிங் தோனி கதாபாத்திரம் ஏன் இடம்பெறவில்லை என்று ஒரு முறை அவரிடம் கேட்டபோது, எம்.எஸ்.தோனி கிரிக்கெட் விளையாட தொடங்கியபோது உயர் படிப்புக்காக வெளியூர் சென்றதால், எம்.எஸ். தோனியின் கிரிக்கெட் பயணத்தில் தனக்கு எந்த முக்கிய பங்கும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...