Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RCB vs PBKS: குறுக்கே வந்த மழை..! நடக்குமா பெங்களூரு – பஞ்சாப் போட்டி? டாஸ் எப்போது..?

IPL Rain Delay: பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 போட்டி, மழை காரணமாக தாமதமாகியுள்ளது. எம். சின்னசாமி மைதானத்தின் சிறந்த வடிகால் அமைப்பின் காரணமாக, மழை நின்றவுடன் போட்டி தொடங்க வாய்ப்புள்ளது. டக்வொர்த்-லீவிஸ் முறை பின்பற்றப்படலாம். டாஸ் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

RCB vs PBKS: குறுக்கே வந்த மழை..! நடக்குமா பெங்களூரு – பஞ்சாப் போட்டி? டாஸ் எப்போது..?
பெங்களூரு ஸ்டேடியத்தில் மழைImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 18 Apr 2025 20:59 PM

இந்தியன் பிரீமியர் லீக்கின் (Indian Premier League) 18வது சீசனின் 34வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 18ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru),  பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோதுகிறது. பெங்களூருவில் காலை முதல் வெயில் அடித்தாலும், சரியாக போட்டி தொடங்குவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக மழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக, தற்போது வரை இந்த போட்டிக்கான டாஸ் போடப்படவில்லை. இதனால், போட்டி நடைபெறுமா இல்லையா என்பது தெரியவில்லை. இருப்பினும், நல்ல செய்தி என்னவென்றால் பெங்களூருவில் தற்போது மழை நின்றுவிட்டதாகவும், விரைவில் டாஸ் அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும், இன்றைய நாளில் போட்டி நடைபெற வாய்ப்புள்ளது, அதற்கு காரணம் என்னவென்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

போட்டி எப்படி நடைபெறும்..?

பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தின் வடிகால் அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. இதனால், மழை நின்றவுடன் போட்டி விளையாடுவதற்கு டக்கென்று ரெடியாகலாம். டக் வொர்த் லீவிஸ்களின் விதிப்படி விதிகளின்படி, 10:54 வரை விளையாடுவதற்கு ஏற்ற சூழ்நிலை இருந்தால், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி தலா 5 ஓவர்கள் விளையாடப்படும். இதற்கு பிறகு மழை நிற்கவில்லை என்றால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழக்கப்படும்.

தொடரும் மழை:

கடந்த சில நாட்களாக பெங்களூருவில் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மழை பெய்து வருகிறது. மற்ற நாட்களை போலவே இன்றும் அதாவது 2025 ஏப்ரல் 18ம் தேதியும் பெங்களூருவில் மழை பெய்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், போட்டி நடைபெறும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி இடையிலான போட்டியை ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள்.

டாஸ் எப்போது..?

ஐபிஎல்லில் வழக்கமாக டாஸ் இரவு 7 மணிக்கு போடப்பட்டு, முதல் பந்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும். ஆனால், இன்று அது நடக்கவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி இடையிலான போட்டியில் மழை பெய்து வருவதால் டாஸ் ஒன்னும் போடப்படவில்லை. இருப்பினும், ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி என்னவென்றால், மழை நின்றவுடன், அடுத்த 10 நிமிடங்களுக்குள் டாஸ் போடப்படும். பின்னர் 20 நிமிடங்களில் ஆட்டம் தொடங்கலாம்.

Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?
Chikoo Benefits :சப்போட்டோவால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா?...
பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் - நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்
பகலில் ஜங்க் ஃபுட், இரவில் நோ ஃபுட் - நமீதாவின் ஃபிட்னஸ் சீக்ரெட்...
ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு
ஜங்க் ஃபுட் விளம்பரங்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு...
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி
ரஜினிகாந்த்துடன் அதிகம் நடிக்காதது ஏன்? மனம் திறந்த ஊர்வசி...
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா
அட ஆச்சர்யம்.. காரை ஸ்கிட் செய்து இளைஞருக்கு டப் கொடுத்த தாத்தா...
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?
ஐபிஎல் தொடங்கும் முதல்நாளே கொட்டப்போகும் மழை.. போட்டி ரத்தா..?...
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின் "வாடிவாசல்" ஷூட்டிங்?
மதுரையில் தொடங்குகிறதா சூர்யாவின்
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
பிரபஞ்சம் விரைவில் அழியப்போகுதா? ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?...
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?
கோடையில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால் இவ்வளவு அற்புத நன்மைகளா?...
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்
மலையாளத்தில் மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய ஃபீல் குட் படங்கள்...
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!
தக் லைஃப் டிரெய்லர் - இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியானது!...