IPL 2025 Restart: குறுக்கே வரும் சர்வதேச போட்டிகள்! ஐபிஎல்லில் விளையாட முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு வீரர்கள்..!

IPL 2025 Resumes: இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025, மே 17 அன்று மீண்டும் தொடங்குகிறது. மீதமுள்ள 17 போட்டிகள் ஜூன் 3ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி வரை நடத்தப்படும். ஆனால், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா வீரர்களின் சர்வதேச போட்டிகள் ஐபிஎல் பிளே-ஆஃப் பங்களிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பல அணிகளுக்கு சவால்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

IPL 2025 Restart: குறுக்கே வரும் சர்வதேச போட்டிகள்! ஐபிஎல்லில் விளையாட முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு வீரர்கள்..!

ஐபிஎல்லில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள்

Published: 

14 May 2025 11:00 AM

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதல் காரணமாக ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் கடந்த 2025 மே 8ம் தேதியுடன் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், ஐபிஎல்லில் விளையாடி வந்த ஒரு சில வீரர்கள் பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக தங்களது சொந்த நாட்டிற்கு கிளம்பினர். இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2025 மே 12ம் தேதியான நேற்று மீண்டும் 2025 ஐபிஎல் தொடங்கும் என்று அறிவித்தது. இதில், மீதமுள்ள 17 போட்டிகள் 6 இடங்களில் நடத்தப்படும் என்றும், இறுதிப்போட்டியானது வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்தது. பிசிசிஐ குறித்த இந்த இறுதிப்போட்டிதான் பல வெளிநாட்டு வீரர்களுக்கு சிக்கல்களை கொடுத்துள்ளது.

ஐபிஎல் 2025 மீண்டும் எப்போது தொடக்கம்..?

வருகின்ற 2025 மே 17ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்குகிறது. 2025 மே மாதம் இறுதியில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2025 ஜூன் வரை சென்றது. இதுதான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு சிக்கலை கொடுத்துள்ளது. வருகின்ற 2025 மே 29ம் தேதி முதல் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன. இது ஐபிஎல் 2025ல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான ரொமாரியோ ஷெப்பர்ட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும். ஷமர் ஜோசப் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர்.

மறுபுறம், ஜோஸ் பட்லர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும், வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றன. இந்த அணிகள் பிளே ஆஃப்க்குள் அடியெடுத்து வைக்கும்போது, இந்த வீரர்கள் எல்லாம் தங்களது நாட்டிற்காக சர்வதேச போட்டிகளில் விளையாட செல்லலாம். இது பிளே ஆஃப்களில் விளையாடும் அணிக்கு மிகப்பெரிய அடியாக மாறும்.

ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா:

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகின்ற 2025 ஜூன் 11ம் தேதி முதல் லார்ட்ஸில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது. இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடி வருகின்றனர். அதன்படி, ஆஸ்திரேலிய வீரர்களான மிட்செல் ஸ்டார்க் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், ஜோஷ் ஹேசில்வுட் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காவும்,  ஜோஷ் இங்கிலிஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர், தென்னாப்பிரிக்கா வீரர்களான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காகவும், மார்கோ ஜென்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும், ஐடன் மார்க்ராம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும், ககிசோ ரபாடா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும், ரியான் ரிக்கல்டன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். இவர்களும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி காரணமாக பாதியில் விலகலாம்.

Related Stories
IPL 2025 Resumes: ஐபிஎல்லில் இந்த வெளிநாட்டு வீரர்கள் சந்தேகம்.. யார் யார் பிளே ஆஃப்களில் விளையாடுகிறார்கள்..? விவரம் இதோ!
Mohammed Shami Retirement: ஓய்வு என தீயாய் பரவிய செய்தி! முகமது ஷமி கொடுத்த நெருப்பான பதில்..!
India vs England Test Series 2025: ரோஹித், கோலிக்கு மாற்று வீரர்கள் யார்? இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி இதுதானாம்..!
IPL 2025 Resumes: ஐபிஎல் விளையாடுவது வீரர்களின் தனிப்பட்ட முடிவு.. பிசிசிஐ ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா!
2027 Cricket World Cup: 2027ல் ஒருநாள் உலகக் கோப்பை! கோலி, ரோஹித் விளையாட மாட்டார்களா? சுனில் கவாஸ்கர் கருத்து!
IPL 2025 Restart: மாற்றப்பட்ட அட்டவணை.. மாற்றப்பட்ட இறுதிப்போட்டி.. மே 17 முதல் மீண்டும் ஐபிஎல் 2025!