Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை 15 அணிகள் தகுதி..! இன்னும் 5 இடங்களுக்கு கடுமையான போட்டி!

ICC Men's T20 World Cup Qualified Teams: 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ICC ஆண்கள் T20 உலகக் கோப்பைக்கான 15 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகளுடன், கனடா, இத்தாலி, நெதர்லாந்து போன்ற அணிகளும் இடம் பிடித்துள்ளன. மீதமுள்ள 5 இடங்களுக்கான தகுதிச் சுற்றுகள் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா-பசிபிக் பிராந்தியங்களில் நடைபெற உள்ளன.

T20 World Cup 2026: 2026 டி20 உலகக் கோப்பையில் இதுவரை 15 அணிகள் தகுதி..! இன்னும் 5 இடங்களுக்கு கடுமையான போட்டி!
2026 டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றுImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Jul 2025 13:18 PM

ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2026 (T20 World Cup 2026) இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த 2026ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்த உள்ளன. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. போட்டியை நடத்தும் நாடுகளான இந்தியாவும் இலங்கையும் நேரடியாக போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேநேரத்தில், ஐரோப்பிய பிராந்திய தகுதி சுற்றுகள் தற்போது சிறப்பாக செயல்பட்டு இத்தாலி (Italy) மற்றும் நெதர்லாந்து (Netherland) அணிகள் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம், 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாடும் மொத்த 20 அணிகளில் 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

எந்தெந்த அணிகள் இதுவரை தகுதி..?

ஐசிசி விதிகளின்படி கடந்த 2024 டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட முதல் 7 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. அதன்படி, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடங்கும். அதேநேரத்தில், டி20 தரவரிசையின் அடிப்படையில் அயர்லாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதன்படி, மொத்தம் 12 அணிகள் எந்த தகுதி போட்டியும் இல்லாமல் டி20 உலகக் கோப்பை 2026க்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

வட அமெரிக்க பிராந்தியத்திலிருந்து கனடா தகுதி சுற்றில் வென்று 13வது அணியாக இடம் பிடித்தது. இதன்பிறகு, இத்தாலி மற்றும் நெதர்லாந்து அணிகள் ஐரோப்பா தகுதிச் சுற்றில் 14வது மற்றும் 15வது இடங்களை பிடித்துள்ளன.

ALSO READ: எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யுங்க.. பாதிக்கப்பட்டவனே நான்தான்.. பெண் மீது புகார் அளித்த யாஷ் தயாள்!

மீதமுள்ள 5 அணிகள் எப்படி தகுதிபெறும்..?

2026 டி20 உலகக் கோப்பைக்கான 5 இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்த அணிகள் 2 வெவ்வேறு தகுதிப் போட்டிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும். முதல் தகுதி போட்டி ஆப்பிரிக்க நாடுகளுக்கானது. இது ஜிம்பாப்வே நாட்டில் வருகின்ற 2025 செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் இதில் 8 அணிகள் பங்கேற்றும், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள், 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.

ALSO READ: பந்துவீச்சில் பயங்கரம்! வேகத்தில் இரண்டாக பிளந்த ஸ்டம்ப்.. வைட்டலிட்டி பிளாஸ்டில் கலக்கிய மெரிடித்!

இரண்டாவது தகுதிப் போட்டியானது ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் விளையாடப்படும். இது ஓமனில் வருகின்ற 2025 அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் 9 அணிகள் விளையாடி முதல் 3 அணிகள் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.

தகுதி பெற்ற அணிகளின் விவரம்:

  1. இந்தியா
  2. இலங்கை
  3. ஆப்கானிஸ்தான்
  4. ஆஸ்திரேலியா
  5. வங்கதேசம்
  6. இங்கிலாந்து
  7. தென்னாப்பிரிக்கா
  8. அமெரிக்கா
  9. வெஸ்ட் இண்டீஸ்
  10. அயர்லாந்து
  11. நியூசிலாந்து
  12. பாகிஸ்தான்
  13. கனடா
  14. நெதர்லாந்து
  15. இத்தாலி