Commonwealth Games 2030: 20 ஆண்டுகளுக்கு பிறகு! இந்தியாவில் 2030ல் காமன்வெல்த் போட்டி.. குஷியில் விளையாட்டு வீரர்கள்!
Commonwealth Sport General Assembly: 2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஏலத்தில் இந்தியா, நைஜீரியாவின் அபுஜாவுடன் போட்டியிட்டது. ஆனால், காமன்வெல்த் விளையாட்டு 2034 பதிப்பிற்கு ஆப்பிரிக்க நாட்டை பரிசீலனையில் வைத்திருக்க முடிவு செய்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கனடா மற்றும் நியூசிலாந்து உட்பட இதுவரை ஒன்பது நாடுகள் இந்தப் போட்டியை நடத்தியுள்ளன.

2030 காமன்வெல்த் போட்டி
2030 காமன்வெல்த் விளையாட்டு (2030 Commonwealth Games) போட்டிகளை நடத்தும் உரிமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற 2025 நவம்பர் 26ம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காவன்வெல்த் விளையாட்டு நிர்வாக குழுவின் கூட்டத்தை தொடர்ந்து அகமதாபாத் (Ahmedabad) போட்டிகளை நடத்தும் நகரமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக, பிரதமர் மோடி இதுகுறித்தான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, சரியாக 20 வருட இடைவெளிக்கு பிறகு, இந்தியா காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துகிறது. முன்னதாக, கடந்த 2010ம் ஆண்டு புது டெல்லியில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அப்போது, இந்திய விளையாட்டு வீரர்கள் 38 தங்க பதக்கங்கள் உட்பட 101 பதக்கங்களை வென்றனர்.
ALSO READ: கேப்டனாக கே.எல்.ராகுல்.. தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. அதன்படி, விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நரேந்திர மோடி மைதானம், நாரன்புரா விளையாட்டு வளாகம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் முக்கிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் போட்டிக்கு நடுவே இடம்:
📣The 2030 Commonwealth Games will be hosted by Amdavad, India!!
At the Commonwealth Sport General Assembly in Glasgow, Commonwealth Games Northern Ireland was delighted to support the awarding of hosting rights for the 2030 Games to the city of Amdavad, India! pic.twitter.com/SDV3esnp1C
— Commonwealth Games Northern Ireland (@GoTeamNI) November 26, 2025
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான ஏலத்தில் இந்தியா, நைஜீரியாவின் அபுஜாவுடன் போட்டியிட்டது. ஆனால், காமன்வெல்த் விளையாட்டு 2034 பதிப்பிற்கு ஆப்பிரிக்க நாட்டை பரிசீலனையில் வைத்திருக்க முடிவு செய்தது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கனடா மற்றும் நியூசிலாந்து உட்பட இதுவரை ஒன்பது நாடுகள் இந்தப் போட்டியை நடத்தியுள்ளன. இந்தியா இரண்டாவது முறையாக போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதை செங்கோட்டையில் இருந்து அறிவித்தார். கடந்த நவம்பரில், 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தனது ஏலத்தை இந்தியா சமர்ப்பித்தது.
ALSO READ: வெளியானது 2026 டி20 உலகக் கோப்பை அட்டவணை.. முதல் போட்டியில் யார் யார் மோதல்?
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் வரலாறு:
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளானது, இது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உள்ள நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் பல விளையாட்டு சர்வதேச நிகழ்வாகும். தற்போது, இதில் 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகள் 1930 ஆம் ஆண்டு கனடாவின் ஹாமில்டனில் தொடங்கியது. இவை முதலில் பிரிட்டிஷ் பேரரசு விளையாட்டுகள் என்று அழைக்கப்பட்டன. 1978ம் ஆண்டு இவை காமன்வெல்த் விளையாட்டுகள் என்று மறுபெயரிடப்பட்டன. 2030ம் ஆண்டு நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்.