Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகாலட்சுமியின் அருளைப் பெற.. வெள்ளிக்கிழமை இப்படி வழிபடுங்க.. இதெல்லாம் நடக்கும்!

வெள்ளிக்கிழமை தோறும் அம்பாளின் அம்சமாக விளங்கும் கல் உப்பினை வாங்கினால், இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்கின்றனர். மேலும், வெள்ளிக்கிழமை தோறும் குபேர விளக்கில் தாமரை திரி வைத்து விளக்கேற்றி வந்தால் குபேரனின் அருள் கிடைக்கும் என்கின்றனர். எது எப்படியோ, வெள்ளி வழிபாடு மிக முக்கியமானதாகும்.

மகாலட்சுமியின் அருளைப் பெற.. வெள்ளிக்கிழமை இப்படி வழிபடுங்க.. இதெல்லாம் நடக்கும்!
மகாலட்சுமி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 31 Oct 2025 15:38 PM IST

மங்களகரமான நாளாக கருதப்படும் வெள்ளிக்கிழமை, பெண் தெய்வங்களுக்கு உகந்ததாகவும் பார்க்கப்படுகிறது. மகாலட்சுமி, துர்க்கை, சந்தோஷி மாதா, அன்னபூரனேஸ்வரி போன்ற பெண் தெய்வங்களை இந்நாளில் கண்டிப்பாக வழிபட வேண்டும். அதன் மூலம் வாழ்வில் அமைதி, செல்வம், வெற்றி போன்றவை கிடைக்கும். தீராத பணப் பிரச்சனையில் இருந்து மீள, செல்வத்தை மேலும் பெருக்க வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை பிரார்த்திப்பது அவசியம் என்கின்றனர்.

24 வெள்ளிக்கிழமைகளில் பூஜை:

ஆன்மீகத்தில் மகாலட்சுமியின் அருளைப் பெற, பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதில், முக்கியமாக வெள்ளிக்கிழமையில், வீட்டினை சுத்தம் செய்து, தூபம் காட்டி மணம் வீசச் செய்ய வேண்டும். பூஜை, விரதம் இதற்கு மத்தியில் பரிகாரங்களையும் செய்கிறார்கள். அதில் சில பரிகாரங்கள் நல்ல பயன் அளிக்கிறது. அந்தவகையில், முதலில் மகாலட்சுமிக்கு விளக்கு ஏற்ற வேண்டும்.

Also Read: காஞ்சிபுரத்தின் ஆளுமை.. இந்த ராஜகோபாலசுவாமி திருக்கோயில் தெரியுமா?

5 வெற்றிலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 5 வெற்றிலைகளிலும் சந்தனம் பூசி, மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பிறகு வெற்றிலைகளை வட்டமாக அடுக்கி, அதன் மீது மணல் விளக்கு வைக்க வேண்டும். அந்த விளக்கிற்கும் சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.

அகல் விளக்கில், கல்லை உப்பை நிரப்ப வேண்டும். மற்றொரு அகல் விளக்கில் நெய்யிட்டு இரண்டு திரிகளை ஒன்று சேர்த்து உப்பு நிரப்பப்பட்ட விளக்கினை மேலே வைத்து வழிபட வேண்டும். இந்த விளக்கை பூக்களால் அலங்கரித்து தீபாராதனை செய்ய வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமை பூஜை செய்து வந்தால், செல்வ வளம் அதிகரிக்கும்.

மகாலட்சுமியின் அருளை பெற:

வெள்ளிக்கிழமை மகாலட்சுமியின் அருளை பெற பசுவிற்கு பச்சைப் புல்லை உணவாகக் கொடுக்கலாம். நெய் வெல்லம், கலந்தும் கொடுக்கலாம். மேலும் இரவு தூங்கும் முன் மகாலட்சுமிக்கு மல்லிகைப் பூக்களை அணிவிக்கலாம். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. திருமண வாழ்வில், பிரச்சனை இருந்தால் மகாலட்சுமிக்கு ரோஜா பூக்களை படைத்தால் பிரச்சனைகள் நீங்கும். தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும். வெள்ளிக்கிழமையில் சுபிட்ஷம் நிலைத்திருக்க, செல்வ வளம் பெருக மகாலட்சுமியை வழிபடுவது நன்மை பயக்கும்.

வெள்ளிக்கிழமை தானம் செய்யலாம்:

ராகு காலத்திலும் மகாலட்சுமியை வழிபடுவார்கள். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். பொதுவாக வெள்ளிக் கிழமைகளில், கொடுக்கல் வாங்கல் செய்ய மாட்டார்கள், செல்வம் கைவிட்டுப் போய்விடும் என்ற கருத்து இருந்து வருகிறது. அது செல்வத்திற்குதான் தான தர்மத்திற்கு கிடையாது. அதனால், பிறர்க்கு உதவுவது நன்மையே. அதனால், வெள்ளிக்கிழமைகளில் பிறருக்கு தானம் செய்யலாம்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)