லட்சுமி தேவி வழிபாடு.. இந்த 4 விஷயத்தை வெள்ளிக்கிழமை செய்யாதீங்க!
இந்து மதத்தில் வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்குரியது. இந்த நாளில் நாம் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இது லட்சுமி தேவியை கோபத்திற்கு ஆளாக்கி, செல்வ இழப்பிற்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது. லட்சுமி தேவியின் அருளால் செல்வமும், வளமும் பெருகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக இந்து மதத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல்வேறு விதமான தெய்வங்களை ஆன்மிக அன்பர்களால் வழிபட்டு வருகின்றனர். அதேசமயம் வாரத்தின் ஏழு நாட்களும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நாளில் நாம் சம்பந்தப்பட்ட கடவுளை வழிபடுவதன் மூலம் வாழ்க்கையின் இன்பம், செல்வ வளம், வியாபார வளர்ச்சி, கல்வி திறன் ஆகியவை செழித்தோங்கும் என்பது நம்பிக்கையாகும். அப்படியான நிலையில் இந்து மதத்தில் வெள்ளிக்கிழமை செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் லட்சுமி தேவிக்கு (Goddess Lakshmi) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நன்னாளில் ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் நாம் லட்சுமி தேவியை வழிபட்டால் வாழ்க்கையில் செல்வத்திற்கும் உணவிற்கும் என்றைக்கும் பஞ்சமிருக்காது என்று நம்பப்படுகிறது. அதேசமயம் வெள்ளிக்கிழமையில் நாம் மூன்று விஷயங்களை எப்போதும் தவிர்க்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
வெள்ளிக்கிழமை தவிர்க்க வேண்டிய 4 விஷயங்கள்
பண பரிவர்த்தனைகள்: பொதுவாக செவ்வாய், வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பணம் தொடர்பான எந்த விஷயத்தையும் செய்ய மாட்டார்கள். காரணம் பணம் லட்சுமி தேவியின் அம்சமாக பார்க்கப்படுகிறது. செல்வத்தின் அதிபதியான அவளுக்குரிய இந்நாளில் நாம் கண்டிப்பாக யாருக்கும் பணம் கொடுக்கவோ மற்றவர்களிடம் இருந்து வாங்கவோ கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் கடன் வாங்கினாலும் அதனை இந்நாளில் திருப்பி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த நாளில் பணம் தொடர்பான பரிவர்த்தனைகளால் லட்சுமி தேவி கோபப்படுவாள் என்று நம்பப்படுகிறது.
யாருக்கும் சர்க்கரை கொடுக்காதீர்கள்: சாஸ்திரத்தில் தானம், தர்மம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. ஆனால் எதெல்லாம் கொடுக்க வேண்டும், கொடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் நாம் அல்லது பக்கத்து வீட்டுக்காரர்கள் தங்களது வீட்டில் இருக்கும் மளிகை பொருட்கள் அவசரமாக தேவைப்படுகிறது என்றால் கேட்பது வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை யாராவது சர்க்கரை கேட்க வந்தால், அவர்களுக்கு அதனை கொடுக்கக்கூடாது என சொல்லப்படுகிறது. இதுசுக்கிர கிரகத்தை பலவீனப்படுத்தும் என நம்பப்படுகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் இந்த கிரகத்தின் செல்வாக்கினால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
யாரையும் அவமதிக்காதீர்கள்: வார்த்தையில் எப்போதும் சுத்தமும், பரிவும் இருக்க வேண்டும். அவர்கள் கடவுளால் அனுதினமும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என சொல்லப்படுவதுண்டு. வயது வேறுபாடாக இருந்தாலும் பெரியவர்களையும், சிறியவர்களையும் நாம் கண்டிப்பாக மதிக்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் மரியாதை கொடுத்து நடக்க வேண்டும். ஆனால் வெள்ளிக்கிழமையன்று தெரிந்தோ தெரியாமலோ யாரையும் அவமதிக்காதீர்கள். இது லட்சுமி தேவியை கோபப்படுத்தி செல்வத்தை இழக்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது.
வீட்டில் அசுத்தம் செய்யாதீர்கள் : தூய்மை இருக்கும் இடத்தில் மட்டுமே லட்சுமி தேவி வசிப்பதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு நல்ல நாளிலும் லட்சுமி தேவியை வழிபடுவதற்கு முன்பு வீடுகள் நன்கு சுத்தம் செய்யப்படுகின்றன. அப்படியான இடத்தில் லட்சுமி தேவி மகிழ்ச்சியாக வசித்து அவளுடைய ஆசீர்வாதங்கள் குடும்பத்தினருக்கு என்றும் அருளுவாள் என்பது நம்பிக்கையாகும். மற்ற நாட்களும் சுத்தம் இருக்க வேண்டும் என்றாலும் வெள்ளிக்கிழமை லட்சுமிக்குரிய நாள் என்பதால் அதிக கவனம் எடுக்க வேண்டும்.
(ஆன்மிக நம்பிக்கையில் இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)