வாரத்திற்கு ஒருமுறை மொபைலை ரீஸ்டார்ட் செய்வதால் என்ன ஆகும்? | TV9 Tamil News

வாரத்திற்கு ஒருமுறை மொபைலை ரீஸ்டார்ட் செய்வதால் என்ன ஆகும்?

Published: 

25 Apr 2026 15:59 PM

 IST

Restarting Your Mobile Weekly: மொபைல் போனை 24 மணி நேரமும் தொடர்ந்து பயன்படுத்துவது பேட்டரி மற்றும் செயல்திறனை பாதிக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை போனை ஆஃப் அல்லது ரீஸ்டார்ட் செய்வது பேட்டரியின் அழுத்தத்தை குறைத்து அதன் ஆயுளை நீட்டிக்கிறது. இது தற்காலிக சேமிப்புகளை நீக்கி, மொபைல் வேகத்தையும் நெட்வொர்க் இணைப்பையும் மேம்படுத்துகிறது.

1 / 5மொபைல் போனை தொடர்ந்து ஆன் நிலையில் வைத்தால், பேட்டரி மீது அதிக அழுத்தம் ஏற்படும்.
இதனால் பேட்டரி அதிக வெப்பமடையும் அபாயம் உள்ளது. அவ்வப்போது போனை ஆஃப் செய்வது இந்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதன் மூலம் பேட்டரியின் ஆயுள் நீண்ட காலம் நல்ல நிலையில் இருக்கும்.

மொபைல் போனை தொடர்ந்து ஆன் நிலையில் வைத்தால், பேட்டரி மீது அதிக அழுத்தம் ஏற்படும். இதனால் பேட்டரி அதிக வெப்பமடையும் அபாயம் உள்ளது. அவ்வப்போது போனை ஆஃப் செய்வது இந்த அழுத்தத்தை குறைக்க உதவும். இதன் மூலம் பேட்டரியின் ஆயுள் நீண்ட காலம் நல்ல நிலையில் இருக்கும்.

2 / 5

நீண்ட நேரம் பயன்படுத்தப்படும் போது மொபைல் மெதுவாக செயல்பட ஆரம்பிக்கும். ஹேங் ஆகுதல் அல்லது லாக் ஆகுதல் போன்ற பிரச்சனைகள் தோன்றும். ரீஸ்டார்ட் செய்வதால் சிஸ்டம் புதுப்பிக்கப்பட்டு வேகம் அதிகரிக்கும். இதனால் தினசரி பயன்பாடு மென்மையாகும்.

3 / 5

சில நேரங்களில் மொபைல் தரவு அல்லது வைஃபை இணைப்பு தடைபடும். இது குறிப்பாக பழைய ஸ்மார்ட் போன்களில் அதிகம் காணப்படும். போனை மறுதொடக்கம் செய்வதால் இணைப்பு மீண்டும் சரியாகும். இதனால் இணைய பயன்பாடு தடையின்றி நடைபெறும்.

4 / 5

போன் நீண்ட நேரம் இயக்கத்தில் இருந்தால், தற்காலிக சேமிப்பு (cache) அதிகரிக்கும். இது மொபைல் வேகத்தை குறைக்கும் முக்கிய காரணம் ஆகும். ரீஸ்டார்ட் செய்வதால் இந்த தேவையற்ற டேட்டா அழிக்கப்படும். இதனால் மொபைல் வேகம் மீண்டும் சீராகும்.

5 / 5

பின்னணியில் இயங்கும் ஆப்ஸ்கள் RAM மற்றும் பேட்டரியை அதிகமாக பயன்படுத்தும். இவை மொபைல் செயல்திறனை பாதிக்கும் முக்கிய காரணமாகும். வாரத்திற்கு ஒருமுறை ரீஸ்டார்ட் செய்வதால் அவை தானாக மூடப்படும். இதனால் மொபைல் ஆரோக்கியமாகவும் திறம்படவும் செயல்படும்.

Follow Us