மகா சிவராத்திரி 2026.. பிப்ரவரி 15-ஆ அல்லது பிப்.16-ஆ? சரியான தேதி, பூஜை நேரங்கள்.. | TV9 Tamil News

மகா சிவராத்திரி 2026.. பிப்ரவரி 15-ஆ அல்லது பிப்.16-ஆ? சரியான தேதி, பூஜை நேரங்கள்..

Published: 

14 Feb 2026 15:07 PM

 IST

Mahashivratri 2026: மகா சிவராத்திரியானது இருளை அகற்றி ஞான ஒளியை பெறும் நாள். சிவபெருமானின் அருள் கிடைக்கும் சக்தி மிகுந்த நேரம், பாவங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும் நாள். உள்ளம் தூய்மையாகி, வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் சக்திவாய்ந்த இரவு. சரியான நேரத்தில் பக்தியுடன் வழிபட்டால், சிவபெருமானின் அருள் நிச்சயமாக கிடைக்கும்.

1 / 52026ஆம் ஆண்டில் மகா சிவராத்திரி எப்போது வருகிறது என்பது குறித்து பலரிடையே குழப்பம் நிலவுகிறது. சிலர் பிப்ரவரி 15 என்றும், சிலர் பிப்ரவரி 16 என்றும் கூறுகின்றனர். ஆனால், சாஸ்திரப்படி பார்க்கும்போது மகா சிவராத்திரி 2026 பிப்ரவரி 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்திய திதி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த வருடம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி பிப்ரவரி 16ம் தேதி திங்கட்கிழமை காலை வரை நடைபெற உள்ளது.

2026ஆம் ஆண்டில் மகா சிவராத்திரி எப்போது வருகிறது என்பது குறித்து பலரிடையே குழப்பம் நிலவுகிறது. சிலர் பிப்ரவரி 15 என்றும், சிலர் பிப்ரவரி 16 என்றும் கூறுகின்றனர். ஆனால், சாஸ்திரப்படி பார்க்கும்போது மகா சிவராத்திரி 2026 பிப்ரவரி 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்திய திதி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்த வருடம் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி பிப்ரவரி 16ம் தேதி திங்கட்கிழமை காலை வரை நடைபெற உள்ளது.

2 / 5

எனினும், சிவராத்திரி முக்கியமாக நிஷித காலம் (நள்ளிரவு பூஜை நேரம்) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அந்த நிஷித காலம் பிப்ரவரி 16 நள்ளிரவில் (அதாவது 15ஆம் தேதியின் இரவு) வருவதால், சிவராத்திரி 15ஆம் தேதியே அனுசரிக்கப்படுகிறது. நிஷித கால பூஜை நேரம்: இரவு 12:09 மணி முதல் 1:01 மணி வரை (பிப் 16 நள்ளிரவு) மொத்தம் சுமார் 51 நிமிடங்கள்.

3 / 5

நான்கு கால பூஜை நேரங்கள்: முதல் யாமம்: மாலை 6:11 – 9:23, இரண்டாம் யாமம்: 9:23 – 12:35, மூன்றாம் யாமம்: 12:35 – 3:47, நான்காம் யாமம்: 3:47 – 6:59. நள்ளிரவு பூஜை (நிஷித காலம்) மிகவும் முக்கியமானது. முழு இரவும் விழித்து இருப்பது சிறப்பு. இந்த நேரத்தில் பால், தண்ணீர், விபூதி, பில்வ இலைகள் கொண்டு பூஜை செய்யலாம்.

4 / 5

வீட்டில் எளிமையாக வழிபடலாம்: சிவராத்திரியன்று வீட்டில் ருத்ராட்ச மாலை, ஜபமாலை அல்லது கழுத்தில் அணியும் ருத்ராட்சம் இருந்தால், மகா சிவராத்திரி அன்று பால், தண்ணீர், பஞ்சகவ்யம் கொண்டு அபிஷேகம் செய்து, சிவபெருமானின் முன் வைத்து வழிபட்டால், அந்த ருத்ராட்சத்தின் சக்தி மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

5 / 5

மகா சிவராத்திரி என்பது சாதாரண திருவிழா அல்ல. இது சிவபெருமானும் பார்வதி தேவியும் இணைந்த தினம். ஆன்ம சுத்தி மற்றும் தவ வாழ்க்கைக்கு ஏற்ற நாள். இரவு முழுவதும் ஜாகரணம் இருந்து சிவனை தியானிக்கும் நாள். இந்த நாளில் பக்தர்கள்:உபவாசம் இருப்பார்கள், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வார்கள், “ஓம் நமசிவாய” மந்திரத்தை ஜபிப்பார்கள்.